உத்தராகண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: உத்தராகண்டின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலா என்ற இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்து இன்று (நவ.4) காலை நடந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். … Read more

’தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவகர்கள்’ என கூறிய கஸ்தூரி இப்போது திடீர் விளக்கம்

Actress Kasthuri | தெலுங்கர்களை அந்தப்புரத்து சேவகர்கள் என கூறிய நடிகை கஸ்தூரி இப்போது தான் அப்படி கூறவில்லை என எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

Benz: `லோகேஷ் அண்ணா நம்பிக்கை கொடுத்தார்!' – இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாய் அபயங்கர்!

`கட்சி சேர’, `ஆசை கூட’ பாடல்களின் மூலம் மார்டன் ஹிட் கொடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சாய் அபயங்கர். ‘ஜென் – சி’ மோடில் அமைந்த இந்த பாடல்கள் வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இது போன்ற ஹிட் பாடல்களைக் கொடுத்த இந்த சுயாதீன இசைக்கலைஞருக்கு தற்போது சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் `பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். Benz movie … Read more

மலிவான கட்டணத்தில் தினம் 2GB டேட்டா… ஏர்டெல் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் 350 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களை கொண்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அவ்வப்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நீண்டகாலத்திற்கான திட்டம், ஒரு வருடம் அல்லது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். வரம்பற்ற 5G இணைய அணுகலை கொண்டது. இதன் விளைவாக, ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களுக்கு, கடும் போட்டியை கொடுக்கும் வகையில் உள்ளது என்றால் மிகையில்லை … Read more

நான் தெலுங்கர் குறித்து அவதூறு பேசவில்லை : நடிகை கஸ்தூரி

சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரி நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி ராஜாக்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பி இருந்ததாக சமூக வலைதளங்களில் … Read more

Mahindra Electric suv – நவம்பர் 26ல் மஹிந்திரா BE 6e, XEV 9e அறிமுகமாகிறது

வரும் நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகின்ற விழாவில் மஹிந்திராவின்  INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட BE 6e மற்றும் XEV 9e என இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிகளின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. XEV மற்றும் BE எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என மஹிந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள XEV மற்றும் BE என இரண்டு பிராண்டுகளிலும் தலா ஒன்று என இரண்டு மாடல்கள் வரவுள்ளது. இதில் முதல் மாடலாக வரவுள்ள XEV 9e ஏற்கனவே … Read more

முடி வெட்ட ஆன்லைனில் புக் செய்த இளைஞர்: வீட்டுக்கு வந்த நபர் செய்த சம்பவம் – போலீஸ் விசாரணை!

மும்பை மேற்கு பகுதியில் உள்ள மலாடு என்ற இடத்தில் வசிப்பவர் நவ்நீத் (39). இவர் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் வீட்டில் இருந்த படியே முடிவெட்டிக்கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து ஆன்லைனில் பார்த்து ஒரு சலூன் கடையில் வீட்டில் வந்து முடிவெட்டவும், ஷேவிங் பண்ணவும் ஆர்டர் செய்தார். உடனே முன்பதிவு செய்த சலூன் கடையில் இருந்து ஒருவர் நவ்நீத் வீட்டிற்கு வந்தார். அவர் நவ்நீத்திற்கு முடிவெட்டி, ஷேவிங் செய்தார். அதன் பிறகு … Read more

உச்சிப்புளி ரயில்வே கேட் திடீர் பழுது: ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி ரயில்வே கேட்டில் திடீரென பழுது ஏற்பட்டதால் ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 7.30 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உச்சிப்புளியில் ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் இன்று (நவ.4) அதிகாலை சென்னையிலிருந்து மண்டபம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக, இந்த … Read more

ஜேஎம்எம் – காங்., – ஆர்ஜேடி மூன்றும் வங்கதேச ஊடுருவல்காரர்களின் ஆதரவாளர்கள்: பிரதமர் மோடி விமர்சனம்

கார்வா: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் வங்கதேச ஊடுருவல்காரர்களின் ஆதரவாளர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக அம்மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கார்வா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ஜார்க்கண்டின் நலன், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கான உத்தரவாதத்துடன் பாஜக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. நேற்று ஜார்க்கண்ட் பாஜக, மிக … Read more

கூகுளில் 25% புரோகிராம் Code-களை ஏஐ எழுதுகிறது: சுந்தர் பிச்சை தகவல்

நியூயார்க்: கூகுளின் மூன்றாவது காலாண்டு வருவாய் தொடர்பான கூட்டத்தில் அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ள தகவல் மென்பொருள் இன்ஜினியர்கள் மற்றும் கோடர்களை அலர்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கூகுள் நிறுவன மென்பொருள் சார்ந்த புரோகிராம் Code-களில் 25 சதவீதம் செயற்கை நுண்ணறிவு நுட்பம் எழுதி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனை பிழை திருத்துவது மற்றும் சரிபார்ப்பது ஆகிய பணிகளை இன்ஜினியர்கள் செய்வதாக அவர் சொல்லி உள்ளார். இப்போதைக்கு வழக்கமாக மேற்கொள்ளபப்டும் சில அடிப்படை பணிகளுக்கு மட்டுமே … Read more