Citroen Aircross Xplorer edition – கூடுதல் ஆக்செரீஸ் உடன் சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ்புளோரர் எடிசன் வெளியானது

இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் கூடுதலான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட சிறப்பு எக்ஸ்ப்ளோரர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிரத்தியேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ள இந்த எக்ஸ்ப்ளோரர் எடிசனில் மிக நேர்த்தியான நிறம் கொடுக்கப்பட்டு அதில் சூப்பரான ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக டேஷ் கேமரா பாதுகாப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஃபுட்வேல் பகுதியில் லைட்டிங் செய்யப்பட்டு இன்டீரியரில் ஒளிரும் வகையிலான சில் பிளேட்ஸ் மற்றும் ஹூடின் மேற்பகுதியில் கார்னிஷ் கொடுக்கப்பட்டிருக்கின்றது. … Read more

சிகரெட், அயர்ன் பாக்ஸால் சூடு; சிறுமியைக் கொடூரமாக துன்புறுத்திக் கொன்ற தம்பதி – சென்னை பகீர்!

சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் சர்புதீன். இவர், கடந்த 1.11.2024-ம் தேதி அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார். அதனடிப்படையில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த சிறுமி, முகமது நிஷாத் என்பவரின் வீட்டில் குழந்தை பராமரிப்பாளராக கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தது தெரியவந்தது. சிறுமியின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் எனவும் … Read more

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: மக்கள் அச்சமடைய வேண்டாம்- உதகை ஆட்சியர்

உதகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் பெய்த கனமழையில் வெலிங்டன் ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது காரின் மீது மரம் விழுந்ததில் ஜாகீர் உசேன் என்பவர் உயிரிழந்தார். குன்னூர், மேல் பாரத் நகரில் வசித்து வரும். ஜெபமாலை மேரி என்பவரன் வீட்டின் … Read more

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த புனேவைச் சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடிகர் சல்மான் கானுக்கு சமீபத்தில் பல கொலை மிரட்டல்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு ஒரு கொலை மிரட்டல் வந்தது. அதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 10 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி, 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி-லாகி எரிமலை ஞாயிறன்று வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு வழிந்தோடியதோடு, கரும்புகையும் அப்பகுதியை சூழ்ந்துள்ளது. எரிமலை வெடிப்பால் அருகிலுள்ள கிராமங்களில் பல கிலோமீட்டருக்கு சாம்பல் நிரம்பியுள்ளது. 4 கிமீட்டர் தூரம் வரை பாறைகள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகளும் … Read more

'வசவாளர்கள் வாழ்க…' விஜய் குறித்து மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் – என்ன சொன்னார் பாருங்க!

Tamil Nadu News Latest Updates: புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என பேசுகிறார்கள் என்றும் திமுக. அரசை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார். 

`சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது!' – மெய்யழகன் படத்தை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்

பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. திரையரங்கில் வெளியாகி வரவேற்பினை பெற்ற நிலையில் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஓடிடி தளத்தில் ‘மெய்யழகன்’ படத்தைப் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், படக்குழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார். இப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். மெய்யழகன் – முன்னோர் வழி, … Read more

நீட்: தமிழக மக்களின் குரலுக்கு மத்திய அரசு பணியத்தான் போகிறது – புதிய கட்சிகள் கூட தி.மு.க அழிய வேண்டும் என்று நினைக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை :  கொளத்தூர் அனிதா அகாடமியில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், மடிக்கணினியும் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, நீட் தேர்வு மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார். “நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறு நாள் நடந்துதான் தீரும்” என நம்பிக்கை தெரிவித்தவர், புதிய கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க … Read more

திருச்சி: விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்பிலான டீ-ஏஜிங் மாத்திரைகள் பறிமுதல்!

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 3 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 407 பாக்கெட்களில் வைட்டமின் (Anti Ageing) மாத்திரைகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த மாத்திரைகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. வயதானவர்களின் தோல் சுருக்கங்களை போக்கி முதுமையை விரட்டி இளமையாக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் … Read more

“100% இடப்பங்கீடு நடைமுறைப் படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள்” – ராமதாஸ்

சென்னை: “சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும்” என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் … Read more