மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பராக் ஷாவுக்கு ரூ.3,300 கோடி சொத்து: 5 ஆண்டுகளில் 575% அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பராக் ஷா கடந்த 2002-ம் ஆண்டில் மேன் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக வலம்வந்த அவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாஜக சீட் வழங்கியது. இதையடுத்து, கட்கோபார் கிழக்கு பகுதி நகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பராக் ஷா2019-ல் முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த பராக் ஷா 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், மகாராஷ்டிரா வின் கட்கோபார் … Read more

புதிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை: அமெரிக்க அதிபர் தேர்தல் களம் எப்படி?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இம்மாதம் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதிதாக வெளியான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பின்னடைவு கண்டுள்ளார். கடந்த ஜூலை இறுதியில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. ட்ரம்பைவிட அவருக்கு கூடுதலாக 3 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். ஆனால், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அவருக்கான ஆதரவு சற்று … Read more

Amaran: “தம்பி அண்ணாமலைக்கு… " – அமரன் குறித்து நன்றி தெரிவித்த கமல்ஹாசன்!

சாய் பல்லவி – சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தத் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தன் எக்ஸ் பக்கத்தில்,“அமரன் படம் பார்க்க நேர்ந்தது. இராணுவ வீரர்களின் நேர்மை, வீரம், தைரியம் உள்ளிட்ட பல அம்சங்களில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். மக்களைக் காக்க ஒரு வீரர் தன்னை தியாகம் … Read more

100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாளே உண்மையான சமூகநீதி நாள்  என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை … Read more

வட மாகாண  ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கிடையில் கலந்துரையாடல்

வடக்கு மாகாண  ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில்  நேற்று முன்தினம் 02.11.2024   இடம்பெற்றது.  இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.  … Read more

Amaran: `அப்போது நான் காவல்துறைப் பொறுப்பில் இருந்தேன்’ – அமரன் குறித்து அண்ணாமலை

சாய் பல்லவி – சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தத் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தன் எக்ஸ் பக்கத்தில்,“ அமரன் படம் பார்க்க நேர்ந்தது. இராணுவ வீரர்களின் நேர்மை, வீரம், தைரியம் உள்ளிட்ட பல அம்சங்களில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். மக்களைக் காக்க ஒரு வீரர் தன்னை … Read more

ஊர் சென்று திரும்புவோர் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபாவளிக்கு ஊர் சென்று சென்னை திரும்புவோரின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்று (நவ.4) பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பேருந்துகளின் 3,529 பயண நடைகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளின் மூலம் … Read more

'டிஜிட்டல் அரெஸ்ட்' விவகாரத்தில் ஏமாற வேண்டாம்: பொதுமக்களுக்கு அமலாக்கத் துறை அறிவுரை

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது என்று அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமார் ரூ.4.69 லட்சம் கோடிக்கும் அதிகமாக … Read more

கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல்: பிரதமர் ட்ரூடோ கண்டனம்

ஒட்டாவா: கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் அச்சம்பவத்துக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். “கனடாவின் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. கனடாவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு இந்து சமயத்தினரைப் பாதுகாத்த காவல்துறைக்குப் பாராட்டுகள்” என்று பிரதமர் … Read more

அமரன் படம் வெறுப்பை விதைக்கும் ஒரு அரசியல் அஜெண்டா – எஸ்டிபிஐ குற்றச்சாட்டு!

அமரன் படம் தேசபக்தியின் பெயரால் வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டா என்று எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.