தமிழக முன்னாள் தலைமை செயலர் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் சென்னை தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் தலைமைச் செயலாளரும், 1966-ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான பி.சங்கர் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். செய்யாறு உதவி ஆட்சியராக தனது இந்திய ஆட்சிப் பணியைத் தொடங்கிய சங்கர், மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளிலும், மத்திய அரசின் செயலாளர் பதவிகளிலும், மத்திய திட்டக்குழுவின் செயலாளர் பதவியிலும், இறுதியாக மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட நேர்மையுடன் பணியாற்றியவர். பி.சங்கரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய சக இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் தலைமை செயலர் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் சென்னை தமிழக  முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மரணத்துக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் தலைமைச் செயலாளரும், 1966-ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான பி.சங்கர் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் … Read more

திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு தீர்மானம்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு, வரிகளை உயர்த்தியது, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணை செயலாளர் தாகிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: மத்திய … Read more

சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா வந்த அமெரிக்கரிடம் சேட்டிலைட் போன் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க பயணியிடம் இருந்து சேட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட தயாராக இருந்தது. அந்தவிமானத்தில் பயணம் செய்ய வந்த அமெரிக்காவைச் சேர்ந்தடேவிட் (55) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, சேட்டிலைட் போன் ஒன்று இருந்தது. இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேட்டிலைட் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு … Read more

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல்: ஈரான் மதத் தலைவர் எச்சரிக்கை

தெஹ்ரான்: இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் யுஎஸ் பி-52 ரக போர் விமானங்கள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. கடந்த அக்டோபர் 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் தேதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் ராணுவ தளங்கள், … Read more

வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் நவ.9 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்நவ.9-ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. இவற்றின் தாக்கத்தால், தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் நவம்பர் 9-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் … Read more

சகோதரி பிரியங்காவை ஆதரித்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

திருவனந்தபுரம்: இந்தியாவில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தியை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது: நம் நாட்டில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகபோராடி பல துன்பங்களை தாங்கி,பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களால் அரசியலமைப்பு சட்டம்உருவாக்கப்பட்டது. … Read more

நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: சிறார்கள் 29 பேருக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு

அபுஜா: நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர். இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது நைஜீரிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 100 பேர் கைது செய்யப்பட்டனர். … Read more

வயநாடு தொகுதியில் பிரியங்காகாந்தியும் ராகுல் காந்தியும் பிரசார,

வயநாடு பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியு, இன்று வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள் ராகுல் காந்தி வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைராஜினாமா செய்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடுகிறார். அவர் கடந்த மாதம் 23-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்து கடந்த மாதம் 28, 29-ந்தேதி என 2 நாட்கள் பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்தார். இன்று பிற்பகல் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் … Read more

தீபாவளி விற்பனையில் செயற்கை இழை ஜவுளி ரகங்கள் ஆதிக்கம்: எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு குறையும் என தகவல்

கோவை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொத்த ஜவுளிப் பொருட்கள் விற்பனையில் பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு முற்றிலும் குறைவதற்கான அறிகுறி இது என்று தொழில் துறையினர் தெரிவித்தனர். பருத்தியை மூலப் பொருளாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளிச் சங்கிலித் தொடரில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பருத்தி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களைவிட, செயற்கை இழை கலந்து தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களுக்கான உற்பத்திச் செலவு குறைகிறது. … Read more