ம.பி.யில் யானை தாக்கி முதியவர் பலி: 10 யானைகள் பலியான அதே வனப்பகுதியில் நிகழ்ந்ததால் பரபரப்பு

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் பந்தவர்கர் புலிகள் சரணாலயத்துக்கு வெளியே காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பகுதியில் கடந்த 29 ஆம் தேதி தொடங்கி இதுவரை 10 யானைகள் உயிரிழந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. யானை தாக்குதலில் உயிரிழந்தவர் ராம்ரதன் யாதவ் (62) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பந்தவர்கர் புலிகள் சரணாலய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்று (சனிக்கிழமை) காலையில் காப்புக் காட்டுக்கு வெளியே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற … Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் அமல் : அமித்ஷா

ராஞ்சி மத்திய அமைச்சர் அமித்ஷா ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதிக்ளில்)ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக(சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தற்போது முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய … Read more

முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகை: 2 நாட்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு நாளை (நவ.5) வருகிறார். மாவட்டம் வாரியாக ஆய்வுப் பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ஆய்வுப் பணியை கோவையில் நாளை தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை கோவை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து டைடல் பார்க் வளாகத்துக்குச் செல்லும் அவர், அங்கு 8 தளங்களுடன், 2 லட்சத்து 94,000 சதுர அடி பரப்பில் … Read more

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், ஷாங்குஸ்-லார்னூ பகுதியில் உள்ள ஹல்கன் காலி அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் உள்ளூர் நபர் … Read more

விஜய்யிடம் தவெக நிர்வாகிகள் கூட்டணி வேண்டாம் என வலியுறுத்தல்

சென்னை இன்றைய தவெக அரசியல் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தலில் யாருடனும் கூட்டணி வேண்டாம் என விஜய்யிடம் வலியுறுத்தி உள்ளனர். கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருவதால் அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். … Read more

''காங்கிரஸ் குடும்ப அரசியலுக்கு எதிராக இபிஎஸ் குரல் எழுப்புவாரா?'' – பொன். ராதாகிருஷ்ணன்

மதுரை: “திமுகவின் குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலுக்கு எதிராக பேசுவாரா?” என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பயிலரங்கு இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தியும் அவரது குழந்தைகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். திமுகவின் குடும்ப அரசியல் குறித்து பேசும் … Read more

“வக்பு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி” – திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு விமர்சனம்

திருப்பதி: வக்பு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி என்று திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு விமர்சித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி, “24 உறுப்பினர்கள் கொண்ட திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் ஒரு இந்து அல்லாதோர் கூட இல்லை. அதன் புதிய தலைவர், தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் … Read more

மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் நபருக்கு 7  கிலோ உணவு தானியம் : ஜார்க்கண்ட் முதல்வர்

ராஞ்சி தாம் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் ஒரு நபருக்கு 7 கிலோ உஅணௌவ் தானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 தேதி அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் புதிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஹேமந்த் சோரன். ”ஜார்க்கண்ட் மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது 11 லட்சம் ரேசன் கார்டுகள் … Read more

மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு 

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியின் 33-வது வார்டு நடூர் முனியப்பன் கோயில் வீதியில் இடியும் நிலையில் இருந்த பயன்படுத்தப்படாத வீட்டுக் கட்டிடம் தொடர் மழையால் தாக்குப்பிடிக்க முடியாமல் இன்று (நவ.3) அதிகாலை இடிந்து விழுந்தது. அப்பகுதியில் … Read more