ஜம்மு – காஷ்மீர் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 11 பேர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் இன்று (நவ.03) தீவிரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்தனர். ஸ்ரீநகரில் உள்ள சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு மையம் (டிஆர்சி) அருகே இன்று காலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை பதுங்குக் … Read more