தாம்பரம் | பைக் ஓட்டியபடி போட்டோ ஷூட் செய்த கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தாம்பரம்: தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி போட்டோ சூட் எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நந்திவரம் – கூடுவாஞ்சேரி, திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சார்ந்தவர் பாலாஜி. திமுக பிரமுகரான இவரது மகன் டெல்லி பாபு (எ) விக்கி (19) சேலையூர் பாரத் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நந்திவரம் … Read more

யோகி ஆதித்யாநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த 24 வயது பெண் கைது

லக்னோ: “உத்தப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போல அவரும் கொல்லப்படுவார்” என்று மும்பை போலீசாருக்கு சனிக்கிழமை மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரியாத எண்ணில் இருந்து சனிக்கிழமை மாலை ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அந்தச் செய்தியில் யோகி ஆதித்யநாத் இன்னும் பத்து நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய … Read more

ம.பி. மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரம் 2 பேர் சஸ்பெண்ட்

மருத்துவமனையில் உயிரிழந்தவரின் படுக்கையில் இருந்த ரத்தக் கரையை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்த விவகாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் கடசராய் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கடசராய் பகுதியை அடுத்த லால்பூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலத் தகராறில் தந்தை மற்றும் மூன்று மகன்கள் … Read more

பிரித்வி ஷா, சுப்மன் கில் குறித்து 2018-ல் நான் கணித்தது சரிதான் – நியூசிலாந்து முன்னாள் வீரர்

மும்பை, இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார். மறுபுறம் … Read more

பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலி; 15 பேர் காயம்

ஜகோபாபாத், பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பஞ்சாப் மாகாணம் நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஜகோபாபாத் பகுதியருகே துல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். இதுதவிர, 15 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு மே மாதத்தில், ஜகோபாபாத் பகுதியில், திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த விருந்தினர்களை ஏற்றிக்கொண்டு … Read more

வேகமாக சென்ற பைக்; அரிவாள் வெட்டு; தலைதீபாவளிக்கு வந்த பெண் கொலை – பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்

தூத்துக்குடி  மாவட்டம், உடன்குடி அருகிலுள்ள சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் சிவன். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு  முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகளான மகராசி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரண்டாவது மகளான முத்துலெட்சுமியை கடந்த மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்த வேல்முத்து என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். சிவனுடன் அவரின் மகன் கோவிந்தன் வசித்து வருகிறார். இந்த நிலையில் … Read more

அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்பட்ட 19 அரசு பல்கலை. பட்டமளிப்பு விழா – ஆளுநர் மாளிகை பெருமிதம்

சென்னை: தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்கள் உடனடியாக பட்டப்படிப்புச் சான்றிதழ்களை பெறும் நோக்கில் ஆளுநர் ஆர்.என். ரவியின் முன் முயற்சி காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் அக்டோபர் மாத இறுதிக்குள் 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர். என். ரவி, மாநில அரசுப் பல்கலைக்கழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், பல்கலைக்கழகங்களின் கல்வித் திறனை … Read more

மகளிர் ரயில் பெட்டியில் பயணம் செய்த 1,400 ஆண்கள் கைது

கொல்கத்தா: கிழக்கு ரயில்வே மண்டலத்தில் மகளிர் ரயில் பெட்டிகள் மற்றும் மகளிர் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த 1,400-க்கும் மேற்பட்ட ஆண் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் ரயில்களில் உள்ள மகளிர் பெட்டிகள் மற்றும் மகளிர் சிறப்பு ரயில்களில் ஆண்கள் ஏறினால் 139 என்ற எண்ணுக்கு அழைத்து ரயில்வே அதிகாரிகளின் உதவியை நாடலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் கிடைத்த புகார்களின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு … Read more

ஒரே நாளில் வெளியான 6 படங்கள்! தீபாவளி ரிலீஸில் வெற்றி யாருக்கு?

Diwali 2024 Movies Amaran Bloody Beggar Brother Who Won : இந்த வருட தீபாவளிக்கு, மொத்தம் 6 படங்கள் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகின. இந்த படங்களில் எதெல்லாம் வெற்றி பெற்றுள்ளது, எதெற்கெல்லாம் தோல்வி என்பதை இங்கு பார்ப்போம்.   

மத்திய அரசை நேரடியாக எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.