இந்தியாவை முடிச்சுவிட்ட நியூசிலாந்து… சொந்த மண்ணில் அரிய 'வைட் வாஷ்'… கம்பீருக்கு கஷ்ட காலம்!

India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 0-3 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.  3RD Test. New Zealand Won by 25 Run(s) https://t.co/Vz7cIv1znY #INDvNZ @IDFCFIRSTBank — BCCI (@BCCI) November 3, 2024

நாளை தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை தெற்கு ரயில்வே நாளை தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.   நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, காட்டாங்கொளத்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4, 4.30, 5, 5.45, 6.20 ஆகிய நேரங்களில் தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த … Read more

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்

ஆண்டிகுவா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து … Read more

ஸ்பெயினில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 213ஆக உயர்வு

மாட்ரிட், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் கொட்டித்தீர்த்தது. அந்நாட்டின் கஸ்டிலா லா மஞ்சா, அண்டலுசியா ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. வெள்ள நீருடன் சேறும் வீடுகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும், ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் வெள்ளத்தில் … Read more

Tamil News Live Today: TVK செயற்குழு கூட்டம் தொடங்கியது; நிறைவேற்றப்படும் 26 தீர்மானங்கள்?

முதல் மாநாட்டுக்குப் பிறகு நடைபெறும் செயற்குழு கூட்டம்! விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ல் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக அமைந்தது. இந்த நிலையில், கட்சியின் தலைவர் விஜய், பனையூர் இல்லத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்திவருகிறார். இதில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. Source link

பவானி சாகர் அணைக்கான நீர் வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு – கொடிவேரி அணையில் குளிக்க தடை

ஈரோடு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி மற்றும் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.5 … Read more

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர்மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் உடன் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியா, கிரீஸ் இடையிலானஉறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் உறுதி மேற்கொண்டோம். வர்த்தகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்தில்இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் மதிப்புமிக்க நட்பு நாடாக கிரீஸ் விளங்குகிறது. இவ்வாறு பிரதமர் … Read more

ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்… கடுப்பான அம்பயர் – நடவடிக்கை பாயுமா?

India A vs Australia A Unofficial Test: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது, புகழ்பெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.  எனவே, இந்தியாவின் பிரதான அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன்னர், இளம் இந்திய வீரர்களும் … Read more

கலத்திருவிழா போட்டிகள் : பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதல்கள்

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை கலைத்திருவிழா போட்டிகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், ”தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வருகிற 7-ந்தேதி நடத்த வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் வருகிற 8-ந்தேதி உள்ளீடு செய்ய வேண்டும். வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை … Read more

இந்திய மண்ணில் 2-வது வெளிநாட்டு அணி.. ஆஸ்திரேலியாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து

மும்பை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து தொடரை கைப்பற்றி இந்திய மண்ணில் வரலாறு படைத்து விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்களும், இந்தியா 263 ரன்களும் … Read more