என்எல்சி நிர்வாகம் – ஒப்பந்த தொழிலாளர் விவகாரம்: பேச்சுவார்த்தை குழுவை அணுக உத்தரவு

சென்னை: என்எல்சியில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து என்எல்சி நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றம், “இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்எல்சி நிர்வாகம் மற்றும் … Read more

அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது: கனடா தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம்சாட்டியதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தகுற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்தியஅரசு, இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023 ஜூன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் 5-ம் தேதி நடைபெறுகிறது: வேட்பாளர்கள் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் இறுதிக்கட்ட பிரச்சாரம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சிவேட்பாளர் கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (78) இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதன்படி அந்த நாட்டில் நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நவ. 6) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர்கமலா ஹாரிஸும், … Read more

ஸ்வர்ண காமாக்ஷி கோவில், 108 சக்தி பீட் கோவில், மதுரமங்கலம்

ஸ்வர்ண காமாக்ஷி கோவில்/108 சக்தி பீட் கோவில், மதுரமங்கலம் ஸ்ரீ 108 சக்தி பீடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கண்ணந்தாங்கல் கிராமத்தில் (சுங்குவார்சத்திரத்திலிருந்து சுமார் 10 கிமீ மற்றும் மதுரமங்கலத்திலிருந்து 2 கிமீ தொலைவில்) அமைந்துள்ளது. தெய்வீக சித்தத்தின்படி, ஸ்ரீ சக்தி பீடத்தின் பின்னால் உள்ள தொலைநோக்கு பார்வையாளரான குருஜி ஸ்ரீ லா ஸ்ரீ காமாக்ஷி சுவாமிஜி ஆவார். நம் துக்கங்களைத் துடைப்பதற்கான மருந்து, கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்ப்பதாகும். பக்தி ஒன்றே நமக்கு … Read more

தீபாவளியின்போது விதிமீறி இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியது: தீபாவளி பண்டிகையின்போது, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் உயர்த்தி வசூலிக்க கூடாது என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையின்போது, சென்னை, மதுரை, திருச்சி, சேலம்,கோவை உள்ளிட்ட முக்கிய … Read more

கேரளாவில் விரைவு ரயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் விரைவு ரயில் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஷோரனூர் பகுதியில் தண்டவாளத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பரதபுழா என்ற நதியின் மீதுகட்டப்பட்டு உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த ராணி, வள்ளி, லட்சுமணன், மற்றொரு லட்சுமணன் என 4 பேர் நேற்று மாலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளா எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்தது. … Read more

சீனர்கள் மீதான தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் சீன நாட்டினர் மீது கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 சீனர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் சீன நாட்டினர் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானில் 60 பில்லியன் டாலர் மதிப்பில் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதற்காக சீன நாட்டினர் பாகிஸ்தானில் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாது: இந்நிலையில் … Read more

ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மூலம் நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு

புளோரிடா: சிறிது காலம் செயல்படாமல் இருந்த நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன், ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உதவி மூலம் நாசா விஞ்ஞானிகள் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். விண்வெளி ஆய்வுக்காக 47 ஆண்டுகளுக்கு முன்பு வாயேஜர் 1 என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. பூமியிலிருந்து 15 பில்லியன் மைல் தூரத்தை கடந்து சென்ற முதல் விண்கலம் வாயேஜர் 1 என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனின் சூழ் மண்டலத்தை தாண்டி, விண்மீன்களுக்கு இடையேயான பகுதிக்குள் வாயேஜர் விண்கலம் உள்ளது. … Read more

தொழிலாளர் பற்றாக்குறையால் தேயிலை பறிக்க நவீன இயந்திரங்கள் பயன்பாடு

வால்பாறை: தேயிலைத் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, நவீன இயந்திரத்தின் மூலம் தேயிலை பறிக்கும் பணியில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. கோவை மாவட்டம் வால்பாறையைச் சுற்றியுள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதுதவிர, காபி, ஏலம், மிளகு ஆகியவைகளும் பயிரிடப்பட்டுள்ளன. பல்வேறு எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலைத் தூள், கோவை, கொச்சி, குன்னூரில் செயல்படும் ஏல மையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், விலைவாசிக்கு ஏற்ற சம்பளம் … Read more

அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர வேண்டும்: மத்திய அரசிடம் மும்பை போலீஸ் கோரிக்கை

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு, முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். … Read more