முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95% பணிகள் நிறைவு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: “ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்றுன. பேருந்து நிலையம் விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பில் நடத்தப்படுகிற போக்குவரத்து துறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. அந்தவகையில், தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையம், விழாக்காலங்களில் அதிகமான பயணிகள் … Read more

ஃபரூக் அப்துல்லா கூறியதை உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொள்ள வேண்டும்: சரத் பவார்

மும்பை: புட்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியதை மத்திய உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பாரமதியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “ஜம்மு காஷ்மீரின் மிகப் பெரிய தலைவர் ஃபரூக் அப்துல்லா. ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். அவரது நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டில் எனக்கு எந்த சந்தேகமும் … Read more

சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்கும் சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடைபெறவுள்ள 67ஆவது காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இதில்  தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ள வுள்ளார். இதற்காக 15 நாள் பயணமாக அவர் இன்று   ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு  பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக  ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் வெளியிட்ட  ய்திக் குறிப்பில், “2024 நவம்பர் மாதம் 05 முதல் … Read more

Canada: அமித் ஷா மீது கனடா முன்வைத்த குற்றச்சாட்டு: கொதிக்கும் இந்திய அரசு! – என்ன நடக்கிறது?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அப்போது இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை … Read more

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி 

புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி ஸ்தம்பித்தது. பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் 30-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 5 நாட்களும், பிற மாநிலங்களான தமிழகம் உள்ளிட்டவைகளில் தீபாவளி தினமான 31-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக … Read more

“வெற்று வாக்குறுதிகளால் பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துவிட்டார்” – பிரியங்கா காந்தி தாக்கு

புதுடெல்லி: 140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் உயரிய, மரியாதைக்குரிய பிரதமர் பதவியின் கண்ணியத்தை நரேந்திர மோடி அழித்துவிட்டார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கடுமையாக தாக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உண்மையே கடவுள்” என்று மகாத்மா காந்தி சொல்வார். முண்டக உபநிஷத்தில் உள்ள “சத்யமேவ ஜெயதே” என்பது நமது தேசிய முழக்கம். உண்மையை நிலைநாட்டும் இந்த லட்சியங்கள், இந்திய சுதந்திர … Read more

Amaran : கமலுக்கு போன் செய்து பாராட்டு… அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினி!

இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் குடும்ப வாழ்க்கை, ராணுவத்தில் அவரின் பங்களிப்பு என அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸின் வார்த்தைகள் மூலமாகவும், அவரின் வலிகளின் மூலமாகவும் பேசியிருக்கிறது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், நடிகை சாய் பல்லவி – நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன். … Read more

பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் மோதி சேலத்தை சேர்ந்த 4 பேர் பலி!

கோவை: பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளிகள் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்காடு அருகே ஷோரனூர் ரயில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த 4 பேர், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி விசப்பட்டு பலியாகினர்.  விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் 3 பேர் உடல் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்,  ஒருவரைன் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தின்போது, … Read more

IndvNz : 'சொதப்பும் நியூசிலாந்து; மீண்டெழும் இந்தியா!' – இரண்டாம் நாளில் என்ன நடந்தது?

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. முதல் நாளில் இந்திய அணி சொதப்பி சரிவை எதிர்கொண்டிருந்த நிலையில் இரண்டாம் நாளில் இந்தியா சிறப்பாக ஆடியிருக்கிறது. Gill முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணியும் நேற்றே தங்களின் முதல் இன்னிங்ஸை தொடங்கிவிட்டது. நேற்றைய நாளின் முடிவில் 19 ஓவர்களில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது. … Read more

சிறுதொழில் தொடங்க ஊராட்சி அனுமதி கட்டாயம்? – தமிழக பாஜக எதிர்ப்பு

சென்னை: சிறுதொழில் தொடங்க ஊராட்சியின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுதொழில் பதிவுகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதை முழுமையாக கடைப்பிடிக்காத நிலை தமிழகத்தில் இருக்கிறது. இந்நிலையில், சிறு தொழில் தொடங்குவதற்கு ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க தமிழக … Read more