பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் ஃபரூக் அப்துல்லா அரசியல் செய்வதாக பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரசியல் செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா, “இதுபோன்ற உணர்வுபூர்வமான பிரச்சினையில் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அரசியலுக்கும், குடும்பத்துக்கும், வாக்கு வங்கிக்கும் முன்னுரிமை கொடுப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஃபரூக் அப்துல்லா தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க இந்திய ராணுவத்தையும், இந்திய ஏஜென்சிகளையும் குறை கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், … Read more

இந்து ரெபேக்கா வர்கீஸிடம் மறுமணம் குறித்து பேசிய மாமனார்..அவர் சொன்ன பதில் என்ன?

Indhu Rebecca Varghese Second Marriage : மேஜர் முகுந்தின் தந்தை, தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாகவும், அதற்கு அவர் கூறிய பதிலையும் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.   

Amaran : “மேஜருக்கு பொருத்தமான அஞ்சலி இந்த `அமரன்'; என் உலக நாயகனுக்கு வாழ்த்துகள்"- லோகேஷ் கனகராஜ்

சாய் பல்லவி – சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தத் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தைப் பார்த்து கண்கலங்கியதாக நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அமரன் திரைப்படக் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “அமரன் உண்மையில் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நம் அனைவரின் … Read more

‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’: பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யிடம் மன்னிப்பு கோரினார் உத்தவ் சிவசேனா எம்.பி சாவந்த்….

மும்பை:  ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என சிவசேனா கட்சியின் பெண் வேட்பாளர் ஷைனா என்.சி.யை விமர்சித்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனருது பேச்சுக்கு  உத்தவ் சிவசேனா எம்.பி சாவந்த்.. மன்னிப்பு கோரியுள்ளார். மும்பாதேவி தொகுதியில் போட்டியிட முன்னாள் பாஜக எம்எல்ஏ, ஷைனா என்.சிக்கு  சிவசேனா கட்சியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார். இந்த தொகுதி ஏற்கனவே மும்பாதேவி தொகுதியில், மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அமீன் படேலுக்கு எதிராக ஷைனா … Read more

தடகளம்: `பட்ட கஷ்டம் வீண் போகல; என் புள்ள ஒலிம்பிக்ல சாதிக்கணும்..!' – நெகிழும் அபிநயாவின் தந்தை

செப்டம்பர் மாதம், சென்னை நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்தவர் தென்காசி மாவட்டம், கல்லூத்தைச் சேர்ந்த அபிநயா. இவர் முந்தைய சாதனையான 11.92 வினாடிகளை முறியடித்து, 11.77 வினாடியில் ஓடி, சாதனை படைத்தார். அபிநயாவின் தந்தை இராஜராஜன் விவசாயி, தாயார் சங்கவி வீட்டில் இருப்பவர். அவர்களின் குடும்பம் கல்லூத்து கிராமத்தில் வசிக்கிறது. ஆனால் விளையாட்டுப் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் அங்கு இல்லை. எனவே, அபிநயா … Read more

“துணை முதல்வருக்கு பேனர்கள் வேண்டாம்” – திமுகவினருக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை

விழுப்புரம்: “விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று, வழிகளில் எங்கேயும் கட் அவுட்டுகள், பேனர்கள் கட்ட வேண்டாம். கட்சி கொடி மட்டுமே கட்ட வேண்டும்” என்று திமுகவினருக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தி உள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனத்தில் இன்று (நவ.2) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவரான செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் தலைமையேற்றார். இக்கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும், வனத்துறை … Read more

டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடிநீர், மின் கட்டண உயர்வு தள்ளுபடி: கேஜ்ரிவால் வாக்குறுதி

புதுடெல்லி: அடுத்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கான உயர்த்தப்பட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். டெல்லி டிரான்ஸ்போர்ட் நகரில் விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “மற்ற கட்சி தலைவர்களைப் போல் நான் அரசியல்வாதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தேன். நாட்டின் கல்வி நிறுவனத்தில் படித்தவன் நான், … Read more

CSK: சிஎஸ்கேவுக்கு அஸ்வின் ஏன் தேவை…? – முக்கிய 3 காரணங்கள்!

IPL 2025 Mega Auction, Latest News Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ஒரு Uncapped வீரர் உள்பட மொத்தம் 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. ருதுராஜ், ஜடேஜா, பதிரானா, தூபே என நான்கு Capped வீரர்களை தக்கவைத்திருக்கும் நிலையில், தோனியை Uncapped வீரராக சிஎஸ்கே தக்கவைத்திருக்கிறது. மொத்த பர்ஸ் தொகையான ரூ.120 கோடியில் ரூ.65 கோடியை செலவழித்துள்ளது.  ஏலத்தில் Capped வீரரை RTM மூலம் … Read more

Amaran : ராணுவத்தை மையப்படுத்திய இந்த படங்களையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

`அமரன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகி வெளியாகியிருக்கிறது. முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் களமிறங்கியிருக்கிறார். மிடுக்கான ராணுவ உடையுடன் உடல் எடையை அதிகப்படுத்தி ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் எஸ்.கே. `அமரன்’ படத்தைப் போல ராணுவத்தை மையப்படுத்திய சிறந்த சில திரைப்படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். ஆல் குவைட் ஆன் வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All quiet on western … Read more

தவெக நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் நாளை அவசர ஆலோசனை!

சென்னை; தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் வெளியிட்டார். மேலும் பாஜக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த மாநாட்டில் விஜய் … Read more