லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்: 52 பேர் பலி

பெய்ரூட்: வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானில் உள்ள தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த கிராமங்கள் குண்டுவீச்சுக்கு உள்ளாகின. இதனிடையே, மத்திய காசாவில் வியாழக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 25 பேரின் உடல்களை பாலஸ்தீனியர்கள் மீட்டெடுத்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு பெய்ரூட்டில் புறநகர் பகுதியான தஹியேக்கில் … Read more

IRCTC Update: பயணிகள் கவனத்திற்கு! இந்திய ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள்!

நவம்பர் 1 முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நாட்கள் 120க்கு பதிலாக 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

Kubera Movie Teaser Release Date : டீசர் வெளியீட்டுத் தேதியை தீபாவளி வாழ்த்துக்களுடன் புதிய போஸ்டர் மூலம்  தெரிவித்த ‘குபேரா’ படக்குழு!  

Cinema Roundup: `LCU-வில் மம்முட்டி?; `Gen Z' மோடில் ஆர்.ஜே. பாலாஜி- இந்த வார டாப் சினிமா தகவல்கள்!

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கு பார்க்கலாம். பவதாரிணியின் கடைசிப் படம்! கடந்த ஜனவரி மாதம் இளையராஜாவின் மகள் பவதாரிணி இயற்கை எய்தினார். இவரது இழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரின் மறைவுக்குப் பிறகு இவரின் குரலை பயன்படுத்தி ஏ.ஐ மூலம் விஜய்யின் `கோட்’ திரைப்படத்திற்காக ஒரு பாடலை ரெக்கார்ட் செய்திருந்தார்கள். அந்தப் பாடல் பவதாரிணியின் குரலில் வந்தால் நன்றாக இருக்கும் என்பதை திட்டமிட்டு இதனை யுவன் ஷங்கர் ராஜாவும் வெங்கட் பிரபுவும் சாத்தியப்படுத்தியிருந்தார்கள். தற்போது … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: மத்தியஅரசுகளால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம்! திருமாவளவன் 2

சென்னை:  மத்தியஅரசுகளால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம் என்றும்,  மத்திய பாஜக அரசு தற்போது,  ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனப் பேசத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும் என விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாகவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் … Read more

சிராஜ் முன் வரிசையில் களமிறக்கம்.. ரோகித் முடிவை விமர்சித்த முன்னாள் வீரர்கள்

மும்பை, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காய்ச்சலால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் … Read more

கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசில்லியன் அபராதம் விதித்த ரஷியா

மாஸ்கோ, உக்ரைன்- ரஷியா இடையேயான மோதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் நிற்கின்றன. ஏற்கனவே, அமெரிக்கா- ரஷியா இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வரும் நிலையில், ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது மோதல் போக்கை மேலும் அதிகரித்தது. இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ரஷியாவின் அரசு ஊடகம் ஒன்றை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தனது யூடியூப் தளத்தில் … Read more

Prashant Kishor : `தேர்தல் ஆலோசனைக்கு நான் வாங்கும் கட்டணம்..' – வெளிப்படையாக பேசிய பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலத்தின் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலுக்கான முடிவு 23-ம் தேதி வெளியாகும். எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்களின் பிரசாரம் நடந்துவரும் நிலையில், ஜன் சூரஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தேர்தல் வியூகருமான பிரஷாந்த் கிஷோர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பெலகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர், “நான் தேர்தல் பிரசாரங்களுக்கு எவ்வாறு நிதி திரட்டுகிறேன் என மக்கள் கேட்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ.3) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு … Read more

“மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை புனிதமாகக் கருதுகிறோம்” – பிரதமருக்கு தெலங்கானா முதல்வர் பதில்

ஹைதராபாத்: மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் புனிதமாகக் கருதுவதாக பிரதமர் மோடிக்கு அளித்துள்ள பதிலில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தெலங்கானா மாநிலம் குறித்தும், தெலங்கானாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு குறித்தும் பல்வேறு தவறான கருத்துகள் உங்கள் அறிக்கையில் இருந்ததை பார்க்க முடிந்தது. இவ்விஷயத்தில் தெளிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலங்கானாவில் டிசம்பர் 7, 2023 இல் காங்கிரஸ் அரசாங்கம் பதவியேற்றது. 10 ஆண்டு கால … Read more