அமரன் ரியல் ஹீரோ… மேஜர் முகுந்த் வரதராஜன் இருந்த 'ராஷ்டிரிய ரைபிள்ஸ்' எதற்கு தெரியுமா?

Rashtriya Rifles: மேஜர் முகுந்த் வரதராஜன் செயலாற்றிய ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இந்த தொகுப்பை வாசிக்கவும்…

Amaran : `நீங்கள் ஆரம்பித்து வைத்ததுதான் சார் இந்த அமரன் வெற்றி..' – கமலுக்கு நன்றி தெரிவித்த எஸ்.கே

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தின் வெற்றியை ஒட்டி பணியாற்றவர்களைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அமரன் திரைப்பட புகைப்படம் “அமரன் திரைப்படத்தை அறிவித்தபோது ‘சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும், சில வேலைகள் கௌரவத்தையும், பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும்’ என்று சொன்னேன். 1000 நாள்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு … Read more

தீபாவளி ‘டாஸ்மாக் மது’ விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாம்! வருத்தத்தில் தமிழ்நாடு அரசு…

சென்னை: தீபாவளி மதுவிற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு தீபாவளியையொட்டி இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும்,  ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என தெரிவித்து உள்ளது. தீபாவளியையொட்டி ஒரே நாளில் மட்டும் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழ்நாடு அரசு, மக்களை குடிகாரர்களாக்கும் மதுவிற்பனையை குறைப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. பொதுவாக தீபாவளியையொட்டி பெரும்பாலான நிறுவனங்களில் சிறிதேனும் போனஸ் வழங்கப்படும் என்பதால், பலர், … Read more

பஞ்சாப் அணி நிர்வாகத்திற்கு நன்றி கடன் பட்டுள்ளேன் – ஷசாங் சிங்

மும்பை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (அக்டோபர் 31-ந் தேதி) மாலை 5 மணிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டன. இதில் பஞ்சாப் அணி … Read more

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வருவதை ‘சட்ட விரோதம்’ என்று அமெரிக்கா வர்ணித்து வருகிறது. எனவே, அந்த போருக்கு தேவையான பொருட்களை ரஷியாவுக்கு அளிக்கும் நாடுகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. ரஷியாவுக்கு போருக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் அளித்ததாக நேற்று 400 க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க நிதித்துறை பொருளாதார தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில், அபார் டெக்னாலஜிஸ், டென்வாஸ் … Read more

Iron Beam: 'அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன்' – அறிமுகம் செய்ய உள்ள இஸ்ரேல்!

பாலஸ்தீனம், லெபனான், ஈரான்…என இஸ்ரேல் தற்போது போரிட்டு வரும் நாடுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகின்றன. இத்தனை நாடுகளிடம் இஸ்ரேல் போரிட்டாலும் அது இன்னமும் பலமாக உள்ளது என்றால் அதற்கு அமெரிக்கா ஒரு காரணமாக இருந்தாலும், இஸ்ரேலிடம் உள்ள அயர்ன் டோமும் ஒரு முக்கிய காரணம். Iron Beam: அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன் எதிரிகளின் ஏவுகணை அயர்ன் டோமின் எல்லையை தொட்ட உடனேயே, அதை இஸ்ரேலுக்குள் செல்லவிடாமல் எதிர் ஏவுகணையை ஏவி எதிர் தாக்குதல் நடத்தி எதிரி … Read more

“கொள்கை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன; தம்பி என்ன?” – விஜய்யை விமர்சித்த சீமான்

சென்னை: “தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன் தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்.” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் … Read more

அத்தியாவசிய மருந்துகளின் விலையேற்றம் குறித்து பிரதமருக்கு காங்., எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்

புதுடெல்லி: தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) சமீபத்தில் அறிவித்த மருந்துகளின் விலை உயர்வு அறிவிப்புக்கு பின்னால் உள்ள காரணங்களை மேலும் விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் மக்களவை எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாணிக்கம் தாகூர் தான் எழுதிய கடிதத்தின் பிரதியை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அக்.25-ம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் பரவலாக பயன்படுத்தப்படும் எட்டு மருந்துகளின் … Read more

ஸ்பெயின் பெருமழை பலி 205 ஆக அதிகரிப்பு; இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. முன்னதாக, அந்த நாட்டின் உயல்வா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வானிலை மையம் சார்பில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். இருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை … Read more

ஒரு தேர்தலில் வியூகம் வகுக்க… பிரசாந்த் கிஷோர் எத்தனை கோடி வாங்குகிறார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்

Prashant Kishor Fees For One Party: ஒரு கட்சிக்கு ஒரு தேர்தலில் வியூகம் வகுத்து கொடுக்க தான் இத்தனை கோடிகளை வசூலிப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தொகையை கேட்டால் நீங்கள் உறைந்து போய்விடுவீர்கள். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.