மத்திய பாதுகாப்புத்துறை செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் பொறுப்பேற்பு….

டெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை புதிய செயலாளராக கேரளாவை சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (நவம்பர் 1ந்தேதி)  டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்புத்தறை அலுவலகத்தில்  பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றார். த்திய பாதுகாப்புத்துறையின் தற்போதைய செயலாளர் கிரிதர் அரமனே, வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து தற்போது பாதுகாப்புத்துறை செயலாளர் சிறப்பு பணி அதிகாரியாக உள்ள ராஜேஷ் குமார் சிங் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ராஜேஷ் குமார் சிங் கேரள … Read more

இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் பேச்சு

வாஷிங்டன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த தொலைபேசி உரையாடலின் போது, பிராந்திய பாதுகாப்பு நிலவரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், உலக அளவிலும் நிலைத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி பேசினர். இந்திய பெருங்கடல் பேச்சுவார்த்தை உள்பட இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். சீக்கிய … Read more

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

பாரீஸ், பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 18-ம் நிலை வீரரான ஹூம்பெர்ட்டுடன் (பிரான்ஸ்) மோதினார். இந்த போட்டியில் அல்காரஸ் 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் ஹூம்பெர்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடம் நீடித்தது. மற்ற ஆட்டங்களில் … Read more

ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 8 பேர் பலி

பெல்கிரேட், செர்பியா நாட்டின் வடக்கு மாகாணம் ஓஓடினா மாகாணம் நோவி சட் நகரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் இன்று வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர். அப்போது திடீரென ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டனர் ஆனாலும், இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் … Read more

Diwali : பட்டாசுப் புகை; காற்று மாசுபாடு… சமாளிக்க கைகொடுக்கும் உணவுகள்! | Health Tips

பட்டாசை வெடித்துத் தள்ளியிருக்கிறோம். கலர் கலர் புஸ்வானங்கள் காற்றை எக்கச்சக்கமாக மாசுப்படுத்தியிருக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களும் எளிதில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுவர். இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதே அதற்குக் காரணம். மற்றவர்களும் இன்னும் சில நாள்களுக்கு காற்று மாசுபாட்டால் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். “இது போன்ற அசாதாரண சூழலில் நாம் அன்றாட உணவில் அதை எதிர்கொள்ளத் தேவையான சத்து நிரம்பிய உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்” என்கிறார் டயட்டீஷியன் கற்பகம் … Read more

“திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ..?” – விஜய்யை சாடிய சீமான்

சென்னை: “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?” என்று தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு முன்புவரை அக்கட்சியுடனான கூட்டணி வாய்ப்புகள் குறித்து திறந்த மனதுடன் பேசிவந்த சீமான் மாநாட்டில் விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியதிலிருந்தே விமர்சனங்களை முன்வைக்கலாகினார். இப்போது வெளிப்படையாக மேடையிலேயே விஜய்யை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு நாளை ஒட்டி சென்னையில் நேற்று (நவ.1) … Read more

“நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள்” – மகாராஷ்டிரா காங்கிரஸுக்கு கார்கே வலியுறுத்தல்

பெங்களூரு: மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களிடம் தான் வலியுறுத்தி இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளேன். உங்களால் முடிந்த அளவு … Read more

ராகுலை நேரடியாக விமர்சித்த எல்எஸ்ஜி உரிமையாளர்! அதுவும் இப்படி ஒரு வார்த்தையில்!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் தொடங்கும் முன்பு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முதல் விஷயமாக அணியின் கேப்டன் கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை. அவருக்கு பதில் நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரைத் தக்க வைத்துள்ளனர். 2022ம் ஆண்டு ஏலத்தில் ராகுலை அணியில் எடுத்தது லக்னோ அணி. அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லக்னோ அணிக்காக ராகுல் விளையாடி … Read more

“திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா.?, பெரியார் பெண்ணுரிமை வழிகாட்டியா? விஜய்-ஐ கடுமையாக விமர்சித்த சீமான்….

சென்னை: “திராவிடமும்  தமிழ் தேசியமும் ஒன்றா.?, 72 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பெரியாரை தான் நீ பெண்ணுரிமை வழிகாட்டி என்பாயா என தவெக தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக வறுத்தெடுத்தார். தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்று நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கையாக அறிவித்து கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அது கொள்கை அல்ல., அழுகிய முட்டை.!”  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜயை … Read more

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் வீடியோ எடுத்த வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் இக்டில் அருகே ஹிரன்பூரை சேர்ந்தவர்கள் அனுஜ் குமார் (20 வயது), ரஞ்சித் குமார் (16 வயது). இவர்கள் சமூகவலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள், நேற்று அதிகாலை இக்டில் ரெயில் நிலையம் பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தூரத்தில் ரெயில் வருவதை பார்த்த அவர்களுக்கு, ரெயில் வரும்போது தண்டவாளத்தில் நின்றபடி வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடவேண்டும் என்ற விபரீத … Read more