திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி, திருமலை கோயிலில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். மேலும், டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அறங்காவலர் குழு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பி.ஆர். நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்காக முதல்வர் … Read more

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துங்கள்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவு

தெஹ்ரான்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் தேதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் 20 ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. அன்றைய தினம் ஈரானின் ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி … Read more

நாளை மூன்று வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைபடி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்! விவரம்…

சென்னை: நாளை (சனிக்கிழமை) மூன்று வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைபடி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தற்போது தீபவாளி  தொடர் விடுமுறையையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறையில் இருப்பதால், மின்சார ரயில்களின் பயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் பராமரிப்பு பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதன்படி,   பராமரிப்பு பணிகள் காரணங்களுக்காக புறநகர் ரயில் சேவை 3 வழித்தடங்களில் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை போன்று நாளை … Read more

காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக

புதுடெல்லி, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்றும், மீறினால் திவால் நிலை ஏற்படும் என்றும், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதன் மூலம், மக்களை தவறாக வழிநடத்தியதை காங்கிரஸ் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது. கர்நாடகாவில் அமலில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்துப் பயண திட்டத்தை … Read more

ஜவுளி, இனிப்பு, பட்டாசு, தங்கம் உள்ளிட்ட பொருட்களின் தீபாவளி விற்பனை ரூ.60,000 கோடி: ஆன்லைன் வர்த்தகமும் களைகட்டியது

சென்னை / சிவகாசி: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்பதால், தீபாவளி விற்பனை களைகட்டியது. சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, … Read more

4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் ரோந்து பணி: இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம்

புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லையில் படைகளை இரு தரப்பும் விலக்கிக் கொண்டுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல ரோந்து பணி தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு 5 இடங்களில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவம் இடையே இரு நாட்டு எல்லை தொடர்பாக கடந்த 2020 மே, ஜூன் மாதங்களில் மோதல் ஏற்பட்டது. ஜூன் 15-ம் தேதி நடந்த கடும் சண்டையில் இந்திய … Read more

ரஷ்யாவுக்கு மின்னணு சாதனங்களை விற்பனை செய்ததாக 19 இந்திய நிறுவனங்கள் மீது தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு மின்னணு சாதனங்களை விற்பனை செய்ததாக 19 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. இந்த சூழலில் ரஷ்யாவுக்கு தேவையான மின்னணு சாதனங்கள், ஆயுத உதிரிபாகங்கள், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவை வடகொரியா, சீனா, இந்தியா, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய … Read more

சென்னையில் கடந்த இரு நாட்களில் 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: தீபாவளியையொட்டி, பட்டாசுகள் கொளுத்தியதால், ஏற்பட்ட குப்பைகள் நேற்று (31/10/24) முதல் இன்று  (01/11/2024) நண்பகல் வரை 156.48 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றபட்டதாக சென்னை  மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று (அக்.31) தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.  சென்னையில் 34 ஆயிரம் தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள  … Read more

ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு அமலுக்கு வந்தது

சென்னை: ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செல்ல நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் வசதியாக இருந்தது. அதேநேரத்தில், இவ்வாறு முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்கள் பலர் தாங்கள் பயணம் செய்யும் தேதிக்கு முன்பாக சில காரணங்களால் … Read more

கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்த தொழிலதிபர்

சண்டிகர்: கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பத். பஞ்சாபில் இவருக்குச் சொந்தமான ஏராளமான பங்களாக்கள், வீடுகள், பண்ணை வீடுகள், எஸ்டேட்டுகள் உள்ளன. இந்நிலையில் தனது நிலத்தில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கான பணிகளை, ரஜிந்தர் சிங் ரூப்ரா என்ற காண்டிராக்டரிடம் குர்தீப் தேவ் ஒப்படைத்தார் குர்தீப் தேவ். இதைத் தொடர்ந்து தன்னுடைய … Read more