13 வயது வளர்ப்பு மகள்களை தந்தை திருமணம் செய்யலாம்: ஈரான் சட்டத்துக்கு குவியும் கண்டனங்கள்

தெஹ்ரான்: ஈரானில் 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதிய சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இளமையான ஈரானை உருவாக்க 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலிரேசா ரைசி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். ஈரானில் ஓராண்டு காலத்தில் … Read more

சேலத்தில் பயங்கர தீ விபத்து: பனியன் கம்பெனியில் பற்றிய தீயில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

சேலம்: தீபாவளி பட்டாசு காரணமாக, சேலத்தில் உள்ள பிரபல பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் ஜெகதீஸ் என்பவருக்கு தொந்தமான பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.  தீபாவளி பண்டிகையை ஒட்டி அந்த பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்த … Read more

ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குடைமிளகாய்: நேரடி விற்பனைக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடைமிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 90 நாட்களில் அறுவடைக்குக் கிடைக்கும் குடை மிளகாயை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவுக்கு மேல், பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். துரித உணவகங்களில் குடைமிளகாயின் தேவை அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதியிலிருந்து உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குக் குடைமிளகாய் விற்பனைக்குச் செல்கிறது. வடமாநிலங்களில் … Read more

வேற்று கிரக ஆராய்ச்சிக்கு மையம்: லடாக்கில் தொடங்கியது இஸ்ரோ

புதுடெல்லி: விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் புதிய அனலாக் ஆய்வு மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது. இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு விண்வெளிக் கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக … Read more

கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் டாலர் அபராதம் விதித்த ரஷ்யா

மாஸ்கோ: யூடியூப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி அதன் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு 20 டெசில்லியன் டாலரை ரஷ்யா அபராதமாக விதித்துள்ளது. ஒரு டெசில்லியன் டாலர் என்பது 1-க்குப் பிறகு 34 இலக்க பூஜ்யஙகளை உள்ளடக்கியது. அப்படிப் பார்த்தால், கூகுள் நிறுவனம் ரஷ்யாவுக்கு செலுத்த வேண்டிய அபராதம் $20,000,000,000,000,000,000,000,000,000,000,000-மாக இருக்கும். உலக நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட ரஷ்யா விதித்த இந்த அபராத தொகை பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமே 110 … Read more

வேற்று கிரகவாசிகள் குறித்த சிறப்பு ஆய்வை ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

“இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லேவில் தொடங்கப்பட்டது!” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் வகையில் வேற்று கிரக நிலைகளின் சவால்களை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தனது முதல் அனலாக் விண்வெளி பயணத்தை இன்று செயல்படுத்தியுள்ளது. இந்தியா பல விண்வெளிப் பயணங்களைத் தொடங்க திட்டமிட்டிருந்தாலும், எதிர்கால விண்வெளி வீரர்கள் வேற்று கிரக பயணங்களில் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள இந்த புதிய பணி உதவும். … Read more

சுயசான்று கட்டிட அனுமதிக்கு கட்டணம் தொடர்பாக தீர்மானம்: ஊராட்சி மன்ற கூட்டத்தில் நவ.5-க்குள் நிறைவேற்ற அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், கட்டிட வரைபட அனுமதியை ஒற்றைச்சாளர முறையில், சுயசான்று அடிப்படையில் வழங்குவதற்கான புதிய கட்டணங்கள் தொடர்பாக, அந்தந்த ஊராட்சிகளில் நவ.5-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரகப் பகுதிகளில் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டிட அனுமதி ஆகியவற்றை எளிதில் பெறும் வகையில், ஒற்றைச்சாளர முறையிலான இணையதளம், கடந்தாண்டு அக்.2-ம் தேதி முதல் முழு செயல்பாட்டுக்கு … Read more

மீண்டும் பெயரை மாற்றிய ஷியா வஃக்பு வாரிய முன்னாள் தலைவர் ரிஜ்வீ, ஜிதேந்திரா நாரயண் சிங் ஆனார்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஜ்வீ மீண்டும் தனது பெயரை மாற்றியுள்ளார். கடந்த 2001-ல் இந்துவாக மாறிய அவரின் புதுப்பெயர் ஜிதேந்திரா நாரயண் சிங். உத்தரப் பிரதேசத்தின் ஷியா மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் வசீம் ரிஜ்வீ. அப்போது அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தொடர்ந்து தான் சார்ந்த இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவே பேசி வந்த அவருக்கு முஸ்லிம்கள் இடையே கடும் எதிர்ப்புகள் நிலவி வந்தது. இத்துடன் பாஜக … Read more

ஹைதராபாத் : மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மோமோ சாப்பிட்ட பெண் உயிரிழந்ததை அடுத்து பீகாரைச் சேர்ந்த 6 மோமோ விற்பனையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் சிங்கடா குண்டாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கடந்த அக்டோபர் 25ம் தேதி மோமோ வாங்கிய ரேஷ்மா பேகம் (31), என்பவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மகள்களுடன் சாப்பிட்டுள்ளார். இதை சாப்பிட்டச் சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் … Read more

“புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது” – விடுதலை நாள் விழாவில் முதல்வர் பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (நவ.1) கடற்கரை சாலை காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொட்டும் மழையில் நடந்து சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் விடுதலை நாள் உரையாற்றி பேசியதாவது: “புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக பயனாளிகளைச் சென்றடைகின்றன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன். புதுச்சேரி அரசானது 16 துறைகள் … Read more