“மலிவான ஸ்டன்ட்” – தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கார்கே பதிலடி!

புதுடெல்லி: ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, ​​மக்கள் முன் மோசமாக அம்பலமாகி நிற்கிறார்கள் என்ற பிரதமர் நரேந்திர மோடியில் விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “பொய், வஞ்சகம், போலித்தனம், கொள்ளை மற்றும் விளம்பரம் ஆகியவை உங்கள் அரசாங்கத்தை சிறப்பாக விவரிக்கும் 5 வார்த்தைகள். 100 நாள் திட்டத்தைப் பற்றி … Read more

34 ஆண்டுக்குப் பின் யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி சாலை திறப்பு: இலங்கை அதிபர் உத்தரவு 

ராமேசுவரம்: இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான சாலையை 34 ஆண்டுகள் கழித்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க இன்று (நவ.1) உத்தரவிட்டார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பலாலி – அச்சுவேலி இடையேயான பிரதான சாலை கடந்த 1990ம் ஆண்டிலிருந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 2009ம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர், இராணுவம் கையகப்படுத்திய இந்த சாலையை பொது … Read more

‘தீபம்-2’ இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தை துவக்கி வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘தீபம்-2’ எனும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இலவச கேஸ் வழங்கும் திட்டத்தை தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது. தற்போது ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதை அடுத்து அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘தீபம்-2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அதாவது ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்களை பயனாளர்களுக்கு … Read more

வெளிநாட்டு கடவுச்சீட்டு குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..

கடவுச்சீட்டு கொள்வனவுக்காக டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ‘P’ வகையின் கீழான வெற்றுக் கடவுச்சீட்டுக்கள் 50,000 தற்போது நிணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், இந்தத் தொகைக்கு மேலதிகமாக நவம்பர் மாத இறுதியில் மேலும் 100,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்களும் டிசம்பர் மாதத்தில் மேலும் 150,000 கடவுச்சீட்டுக்களும் என 750,000 கடவுச்சீட்டுக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ளன. அதே நேரம் மேலும் வெற்றுக் கடவுச்சீட்டுத் … Read more

கரூர்: தீபாவளி மாமூல் கேட்டு, பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வெள்ளப்பட்டி பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. நச்சலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நடத்தி வரும் இந்த பெட்ரோல் பங்கில் இன்பரசு என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அதே ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி மற்றும் மூன்று இளைஞர்கள் பங்கிற்கு வந்து அவரிடம் தீபாவளி ஃபோனஸ் கேட்டு மிரட்டி பணம் கேட்டு தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘பணம் தரவில்லை என்றால், பங்க் இருக்காது’ என்று … Read more

“வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினத்தைப் போற்றி மகிழ்வோம்” – தவெக தலைவர் விஜய்

சென்னை: “தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம்” என தமிழ்நாடு தினத்துக்கு தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “1956-ல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் … Read more

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் பிபேக் டெப்ராய் மறைவு

புதுடெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதர ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் டெப்ராய் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 69. யார் இந்த பிபேக் டெப்ராய்: தனது பள்ளிப்படிப்பை நரேந்திரபூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் முடித்த பிபேக் டெப்ராய், மேற்படிப்புகளை கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி கல்லூரி, டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், கேம்ப்ரிட்ஜில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் முடித்தார். கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி கல்லூரி, புனேவில் உள்ள கோகலே இன்ஸ்ட்டிடியூட் … Read more

‘பிரேக்கிங் பேட்’ பாணியில் மெகா போதைப் பொருள் ஆய்வகம்: கனடாவில் இந்திய வம்சாவளி நபர் கைது

ஒட்டாவா: கனடாவில் ‘பிரேக்கிங் பேட்’ வெப் தொடர் பாணியில் மிகப்பெரிய போதைப் பொருள் ஆய்வகத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 2008ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க வெப் தொடர் பிரேக்கிங் பேட். இதில் பிரதான கதாபாத்திரங்கள் இரண்டு பேர் ‘மெத்’ வகை போதைப் பொருளை தயாரிக்க சொந்தமாக ஆய்வகம் நடத்தி வருவர். கனடா நாட்டில் இதே பாணியில் இயங்கி வந்த மிகப்பெரிய போதைப் பொருள் ஆய்வகத்தில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். … Read more

தேர்தல் முடியும் வரை சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடை விதித்து மொரிசியஸ் அரசு உத்தரவு

மொரிசியஸ் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 11-ம் தேதி வரை சமூக வலைதளங்கள் தடைசெய்யப்படும் என்று அந்நாட்டு தேசிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ள சட்டவிரோத பதிவுகளை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதள ஊடகங்களை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க நேற்று (அக். 31) மாலை மொரிசியஸ் … Read more

Honda Activa electric details: ஆக்டிவா எலெக்ட்ரிக் எப்படி இருக்கும் தெரியுமா..? ஹோண்டா சொன்ன தகவல்.!

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஆக்டிவா பெயரில் 110சிசி ICE மாடலுக்கு இணையான செயல்திறன் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாகவும் விளங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. தற்பொழுது சந்தையில் உள்ள 110cc பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும், அதே நேரத்தில் போட்டியாளர்களான ஓலா, ஏதெர், டிவிஎஸ், பஜாஜ் சேட்டக், வீடா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன் நிலையான பேட்டரி (Fixed Battery Tech) கொண்டிருக்கும் என … Read more