Month: November 2024
ரூ.250 கோடியில் திமுக ‘தேர்தல் தீபாவளி’ கொண்டாடியதாக தமிழக பாஜக விமர்சனம்
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தீபாவளிக்காக திமுகவினர் ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், சனாதன தர்மத்தை ஒரு பக்கம் எதிர்த்து பேசிக்கொண்டு, இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து … Read more
ஒடிசாவில் மாங்கொட்டையில் தயாரிக்கப்பட்ட கூழ் குடித்து 2 பெண்கள் உயிரிழப்பு; 6 பேர் கவலைக்கிடம்
பெர்ஹாம்பூர்: ஒடிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் மேங்கோ கர்னல் கூழ் (மாங்கொட்டையால் தயாரிக்கப்பட்ட கூழ்) குடித்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 6 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து ஒடிசா போலீஸ் வட்டாரம் வெளியிட்ட தகவல்: டாரிங்பாடி தொகுதியின் மண்டிபங்கா கிராமத்தில் ஓட்ஸ் பால் அல்லது தண்ணீரில் வேகவைத்து தயாரிக்கப்படும் மேங்கோ கர்னல் கூழை சிலர் பெரும்பாலும் பெண்கள் புதன்கிழமை குடித்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பெண்களில் ஒருவர், கஜபதி மாவட்டத்தில் உள்ள மோகனா … Read more
ராக்கெட் தாக்குதலில் 7 பேர் பலி… இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 4 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்…
இஸ்ரேல் மீது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். இன்று நடைபெற்ற இந்த ராக்கெட் தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த 4 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலின் மெடுலா நகர் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 3 பேர் மற்றும் நான்கு தாய்லாந்து பிரஜைகள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாவின் இந்த கொலைவெறி தாக்குதல் இதுவரை இல்லாத அளவு மிகவும் மோசமான தாக்குதலாக இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. லெபனான் எல்லையை … Read more
vida child dirt bike – குழந்தைகளுக்கான வீடா எலெக்ட்ரிக் டர்ட் பைக் வெளியாகுமா..!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் லினக்ஸ் மற்றும் ஏக்ரோ என இரு டர்ட் பைக் கான்செப்ட் கடந்த முறை EICMA அரங்கில் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது உற்பத்தி நிலை மாடல் நவம்பர் 4ஆம் தேதி EICMA கண்காட்சியில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ஹீரோ வீடா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள டீசர் மூலம் புதிய டர்ட் அட்வென்ச்சர் மாடல்கள் விற்பனைக்கு வரக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சுவாரஸ்யமான … Read more
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் இரண்டாவது நாள் இன்று
இன்று (01) காலை முதல் அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்புகள் ஆரம்பமானதுடன் தமது வாக்குகளை அரசாங்க உத்தியோகத்தர்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். இதேவேளை, நேற்று முன்தினம் (30) தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானதுடன், மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது வாக்குகளை தபால் மூலம் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றும் (01) எதிர் வரும் 04ஆம் திகதி திங்கட்கிழமையும் முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் … Read more
சென்னை: பட்டாசு வெடித்தில் தகராறு; சிறுவன் அடித்துக் கொலை..!
சென்னை ராயப்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரின் மகன் ஷாம் (17). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தன்னுடைய நண்பரைச் சந்திக்க ஐஸ்ஹவுஸ் செல்லம்மாள் தோட்டத்துக்குச் சென்றார். பின்னர் அங்கு நண்பர்களுடன் சேர்ந்து ஷாம், பட்டாசுக்களை வெடித்து மகிழ்ந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கக் கூடாது என கூறியிருக்கிறார். ஆனால் அதையும் மீறி பட்டாசுக்களை வெடித்திருக்கிறார்கள். இதையடுத்து ஷாமை அந்த நபர் அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதில் காயமடைந்த ஷாமை ராயப்பேட்டை … Read more
தொலைத்தொடர்பு கம்பி வடங்களை துண்டிப்போர் மீது கடும் நடவடிக்கை: ரயில்வே எச்சரிக்கை
மதுரை: ரயில் போக்குவரத்துக்கு உதவிடும் தொலைத்தொடர்பு கம்பி வடங்களைத் துண்டிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்க, ரயில் பாதை அருகே பூமிக்கு அடியில் செல்லும் தொலைதொடர்பு கம்பி வடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் இந்த தொலை தொடர்பு கம்பி வடம் ஒரு ரயில் பாதையில் ,ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரயில்களை இயக்குவதை தடுப்பதற்கும், ரயில் … Read more
வாக்குறுதி விவகாரம்: காங்கிரஸ் மோசமாக அம்பலம் ஆவிட்டதாக பிரதமர் மோடி விமர்சனம்
புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான மல்லிகார்ஜுன் கார்கேவின் ஆலோசனைகளை அடுத்து காங்கிரஸ் கட்சி மோசமாக அம்பலமாகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது, ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் அவர்கள் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, மக்கள் முன் மோசமாக … Read more
Amaran: “சிந்திய ரத்தத்துக்கும், கண்ணீருக்கும் எளிய காணிக்கை'' – வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் அறிக்கை
சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தின் வெற்றியை ஒட்டி பணியாற்றவர்களைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். “திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்த போது “சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும்; சில வேலைகள் கௌரவத்தையும், பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமைத் … Read more