பிரியங்கா உள்பட 16 பேர் போட்டி: வயநாடு மக்களவை இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது…

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைக்கான  இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா காந்தி உள்பட 16 பேர் போட்டியிடுகின்றனர். ராகுல்காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி,   கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில்  நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 23ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இ தைத்தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே பிரியங்கா உள்பட 21 … Read more

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய..

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தின் அடிப்படை படியாக, கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் … Read more

INDvsNZ: `தலைக்கனத்தைக் கொஞ்சம் குறைங்க கம்பீர் & கோ!' இதுதான் உங்கள் அட்டாக்கிங் ஆட்டமா?

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அடிவாங்கி தொடரை இழந்த நிலையில் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது. வலுவான அணியாக ஆதிக்கமாக ஆடி வந்த இந்திய அணி இந்த நியூசிலாந்து தொடரில் கத்துக்குட்டி அணியைப் போல ஆடி வருகிறது. India நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட் ஹாலை … Read more

“இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக…” – ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து

சென்னை: “2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக ஆளுநரின் சமூக வலைதளப் பக்கமான ராஜ்பவன் தமிழ்நாடு எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தையொட்டி, நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தமிழ்நாடு தனது வளமான ஆன்மிகம், கலாசாரம், இலக்கிய பாரம்பரியம் கொண்ட பாரதத்தின் சிந்தனை … Read more

வாக்குறுதிகளால் மக்களை தவறாக வழிநடத்திய கார்கேவும் ராகுலும் மன்னிப்புக் கோர வேண்டும்: பாஜக

புதுடெல்லி: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை தவறாக வழிநடத்தியற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்றும், மீறினால் திவால் நிலை ஏற்படும் என்றும், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்றும் … Read more

ஸ்பெயின் கனமழை – வெள்ளம்: 150+ உயிரிழப்புகள் முதல் திணறும் மீட்புக் குழுவினர் வரை!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக 158 பேர் உயிரிழந்தனர். கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு வரலாறு காணாத மழை சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் அவலநிலை அங்கு நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டின் மோசமான … Read more

அக்டோபர் மாத ஜிஎஸ்டி ரூ.1.87 லட்சம் கோடி வசூல்!

டெல்லி:  அக்டோபர் மாதத்தில் மட்டும்  ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்து உள்ளது. இது கடந்த மாதத்தை விட 9 சதவிகிதம் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது- அதாவது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகம். இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  : நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. … Read more

மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி –  அச்சுவேலி பிரதான வீதி  இன்று முதல் பொதுமக்கள் பாவனைக்கு..

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை இன்று (01) திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டதுடன், யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி … Read more

பாலய்யா வஸ்தாவய்யா 7: `பருப்பே துணை' – தமிழ் IAS சென்டிமென்ட் – பாலய்யா தோண்டிய குழிகள்

பாலய்யா தொடருக்கு பல்வேறு திசைகளிலிருந்தும் பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..! ”பாலய்யா பற்றி பாசிட்டிவா சொல்ல நிறைய உண்டே..? அதை விட்டுறாதீங்க யப்போ!” என்ற விமர்சனத்துக்கு நாம் செவிகொடுத்தே ஆக வேண்டும்… அதனால்… பாலய்யா எப்போதும் தன்னை வள்ளல் என்றும் கொடுத்துச் சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர் என்றும் பாராட்டுவதை வெகுவாக விரும்புவார். இந்துபுரம் தொகுதியிலிருந்து யாரேனும் உதவி கேட்டு வந்தால் ஸ்ரீசத்ய சாய் மாவட்ட கலெக்டருக்கு போன் கால் பறக்கும். சுற்றிலும் நாற்பது … Read more

சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல: எச்.ராஜா 

கும்பகோணம்: சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல என்று எச்.ராஜா தெரிவித்தார். கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது குடும்பத்துடன் தரிசனம் மேற்கொண்டப்பின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2014-2019-ல் பாஜகவிற்கு என அறுதிப்பெரும்பான்மை இருந்தும் கூட கூட்டணி கட்சிகளை ஆட்சியில் பங்கு பெறவைத்திருந்தோம். ஆட்சியில் பங்கு என்பது யார் பெயரைக் கூறி, யாருடன் கூட்டணி என வாக்கு சேகரித்து வெற்றி பெறுகிறமோ, அவர்களுக்கு ஆட்சியில் பங்களிக்க … Read more