கிராம தரிசனம்: தை பிறந்தவுடன்  கட்சிக்கு வழி பிறக்கும்! செல்வபெருந்தகை

சென்னை: தை பிறந்தவுடன்  கட்சிக்கு வழி பிறக்கும்  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை  தெரிவித்து உள்ளார்.  மேலும் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்கும்கிராம தரிசனம்  நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்றார். நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய், அதிகார பகிர்வு குறித்து வெளிப்படையாக அறிவித்தார். இது மற்ற கட்சிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலும் பலர், அதிகாரப்பகிர்வு குறித்து வெளிப்படையாக கருத்து … Read more

2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

சட்டோகிராம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் … Read more

"சீனாவின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது.." – களமிறக்கப்படும் வடகொரிய ராணுவம் குறித்து ஜெலென்ஸ்கி வேதனை

கீவ், ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜான் அன் தன் ராணுவத்தின் அதிசிறப்பு படையை சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வழங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனை எதிர்த்து … Read more

Sai Pallavi: புறக்கணிப்பு, விமர்சனம் கடந்த வெற்றி; சாய் பல்லவியின் சினிமா பயணம் – விரிவான பார்வை

அமரன் திரைப்படத்தில் திரைக்கதையை தூக்கிச் சுமப்பதில் பெரும்பங்கு வகிக்கிறார் நடிகை சாய் பல்லவி. அவரின் கச்சிதமான நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. Wrong Number, Fake Call எனத் தனக்கு வந்த பிரேமம் பட வாய்ப்பை அன்று அவர் புறக்கணித்திருந்தால் இன்று, இவ்வளவு திறமையான, தெளிவான சிந்தனைகொண்ட, சிறந்த நடிகையை இழந்திருப்போம் என்றே ரசிகர்கள் எழுதி வருகிறார்கள். அப்படி பல திருப்பங்கள் நிறைந்த சாய் பல்லவியின் சினிமா பயணம் குறித்து ஒரு பார்வை விகடன் வாசகர்களுக்காகவும், சாய் … Read more

“திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கிறது தமிழகம்”- அண்ணாமலை 

சென்னை: “குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, உறுதியேற்போம்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் … Read more

மாநிலங்கள் உருவாக்க தினம்: பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் பல்வேறு மாநிலங்களின் தனித்தன்மைகளை எடுத்துக்கூறி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது, “கன்னடா ராஜ்யோத்சேவா என்பது, கர்நாடகாவின் முன்மாதிரியான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை உருவாக்கும் … Read more

ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் லா லிகா கிளப்புகள்!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தொழில்முறை கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையிலான தொடரினை ஒருங்கிணைத்து நடத்தும் லா லிகா அமைப்பு மற்றும் அதன் கிளப் அணிகள், அந்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுகிறது. ஸ்பெயின் நாட்டில் அண்மையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 158 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வலேன்சியா பகுதியில் பாதிப்புகள் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செஞ்சிலுவை சங்கத்துக்கு … Read more

விசில் போடு: சிஎஸ்கே அணியில் மீண்டும் ‘தல’ தோனி…..

சென்னை: 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மீண்டும் எம்.எஸ்.தோனி விளையாடுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதற்காக அணி நிர்வாகம் தல தோனியை ரூ.4 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. மேலும், ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பதிரனா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் மவுசு உள்ளது. இதனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களும் … Read more

3-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

மும்பை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது. இதனையடுத்து இவ்விரு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற … Read more

ஸ்பெயின் நாட்டில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 158 ஆக உயர்வு

மாட்ரிட், ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஸ்பெயினில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் இடி, மின்னலுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள முக்கிய நகரங்களை நீரில் மூழ்கடித்தது. சுமார் 5 … Read more