வெள்ளோடு பறவைகள் சரணாலயப் பகுதியில் பறவைகளுக்காக பட்டாசைத் தவிர்க்கும் கிராம மக்கள்

ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பறவைகளை அச்சப்படுத்தும் வகையிலான ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்த்து, இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் 215 ஏக்கர் பரப்பில்,வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியா, சைபீரியா, இலங்கை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெலிகான்,கொசு … Read more

BPL நிறுவனர் டிபிஜி நம்பியார் காலமானார்

பெங்களூரு: பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1963-ல் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிபிஎல் நிறுவனத்தை நிறுவினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட டிபிஜி நம்பியார், இந்தியாவின் தரமான எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பிபிஎல் நிறுவனத்தை தொடங்கினார். மருத்துவ உபகரணங்கள், தொலைக்காட்சி, பிரிட்ஜ், … Read more

கனமழை காரணமாக வெள்ளக்காடான ஸ்பெயின்: 150-க்கும் மேற்பட்டோர் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் மற்றும் கார்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளனவா என தேடும் சவாலநிலை அங்கு நிலவுகிறது. அந்த நாட்டின் கிழக்கு வலேன்சியா பகுதியில் மட்டும் 155 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுனாமி … Read more

திடீரென வெடித்த வெங்காய குண்டு… ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம் – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Onion Bomb Blast: ஆந்திராவில் வெங்காய குண்டு திடீரென வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

Amaran: 'இந்த படம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல… இந்திய சினிமாவுக்கும் பெருமை' – ஞானவேல்ராஜா

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி அன்று (நேற்று) அமரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், பருத்திவீரன், சிங்கம், கங்குவா உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா, அமரன் படத்தை பாராட்டியுள்ளார். அதில்… “மும்பையில் அமரன் படத்தை பார்த்தேன். இந்தப் படத்தை கொடுத்த தமிழ் சினிமாவில் ஒரு அங்கமாக…திரைப்பட தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு பிரேம்களிலும்… படத்தின் ஒவ்வொரு பிரேம்களிலும் பல கட்ட ஆராய்ச்சி மற்றும் உண்மைதன்மையுடன் அசோக் சக்ரா … Read more

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையங்களில் சிறப்பு மின்சார ரயில்கள்

சென்னை: தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ரயில் நிலையங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளின் சுமார் 15 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.  மேலும் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் ரயில்களுடன் பல சிறப்பு ரயில்களும் … Read more

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற நபர்

பால்கர், மராட்டியத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள நரிங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னில் தாவ்ரே (30 வயது). இவரது மனைவி ரோஷினி (28 வயது). இந்த தம்பதிக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. ரோஷினி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர். இந்த நிலையில் அவர் ஸ்வப்னில் தாவ்ரேவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சமீபகாலமாக ஸ்வப்னில் தாவ்ரேக்கு மனைவி ரோஷினியின் நடத்தையில் சந்தேகம் … Read more

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் – தபாங் டெல்லி அணிகள் … Read more

இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்திய லெபனான் – 7 பேர் உயிரிழப்பு

பெய்ரூட், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி … Read more

UNFPA பிரதிநிதி மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஆண் பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கென நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் UNFPA அமைப்பின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிசெய்தார். இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் ஆண் பெண் சமத்துவம், மகளிரின் … Read more