மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட பிறகு காணாமல்போன சிவசேனா எம்எல்ஏ வீடு திரும்பினார்

மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகு காணாமல் போன சிவசேனா எம்எல்ஏ நேற்று காலையில் வீடு திரும்பினார். மகாராஷ்டிராவின் பல்கார் தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் வங்கா. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த இவருக்கு எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் எம்.பி. ராஜேந்திர காவிட்டை வேட்பாளராக ஷிண்டே தேர்வு செய்தார். இதனால் வங்கா ஏமாற்றம் அடைந்தார். உத்தவ் தாக்கரேவை விட்டு வந்ததற்காக அவர் வருத்தம் … Read more

“கமலா, ஜோ பைடன் இந்துக்களை புறக்கணித்து விட்டனர்” – டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர். எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும் எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனான நமது சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இன்னபிற சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த நாட்டில் இன்னும் … Read more

ஜம்மு காஷ்மீர்: கவர்னர் – முதல் மந்திரி உமர் அப்துல்லா இடையே மோதல் போக்கு

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதன் 5-ம் ஆண்டு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்மால் உமர் அப்துல்லா மற்றும் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த துணை நிலை கவர்னர் கூறியது, தற்போதுவரை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தான் அதனை கொண்டாடுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநிலமாக மாறினால் அந்த நாளையும் கொண்டாவோம்.யூனியன் பிரதேச முதல்வராக பதவியேற்று கொண்டு, அதன் உருவான தினத்தை முதல்வர் ஒமர் அப்துல்லா … Read more

முதல்முறையாக போட்டியிடும் ராஜ் தாக்கரே மகன்; பாஜக ஆதரவு – கூட்டணி வேட்பாளர் விலக நெருக்கடி?!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே மும்பை மாகிம் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல் முறையாக தேர்தல் களம் காணும் அமித் தாக்கரேயிக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலகும்படி தற்போது மாகிம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சதா சர்வான்கரிடம் சிவசேனா(ஷிண்டே) கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் போட்டியில் இருந்து விலக மறுத்துவிட்டார். அதோடு, `தனக்கு அநீதி இழைக்கவேண்டாம்’ என்று ராஜ் தாக்கரேயிடம் சதா சர்வான்கர் உணர்ச்சிப்பூர்வமாக கேட்டுக்கொண்டார். வரும் 4-ம் … Read more

மழையால் பட்டாசு விற்பனை பாதிப்பு: பிற்பகலில் மீண்டும் சூடுபிடித்தது

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது. காலையில் விறுவிறுப்பாக இருந்த பட்டாசு விற்பனை நண்பகலில் கனமழை பெய்து, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதித்தது. பிறகு பிற்பகலில் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது. பட்டாசுகளை தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும்தான் மக்கள் அதிகமாக வாங்குவார்கள். அதுபோலவே இந்தாண்டும் தீபாவளிக்கு முதல் நாள் வாங்கிக் கொள்ளலாம் என்று மக்கள் வழக்கம்போல திட்டமிட்டனர். “தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்” … Read more

மும்பையில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி விநாயகர் சிலையை வாங்கிய ஸ்பெயின் பிரதமர்

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் யுபிஐ மூலமாக பணம் செலுத்தி மும்பையில் உள்ள அங்காடியில் விநாயகர் சிலையை வாங்கினார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அவர் யுபிஐ மூலமாக பணம் செலுத்தி பொருட்களை வாங்கியது பெரிய அளவில் பேசுபொருளானது. இதையடுத்து, சில வாரங்களுக்குப் பிறகு பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் மூலமாக யுபிஐ சேவை … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது- காங்கிரஸ்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.அங்கு பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி நாங்கள் இப்போது செயல்பட்டு வருகிறோம். முன்பு நாடு முழுக்க வேறு வேறு வரி செலுத்தும் முறைகள் இருந்தன. ஆனால், பாஜக தலைமையிலான பாஜக அரசுஒரே நாடு ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது” என்று கூறினார். மோடியின் இந்த … Read more

அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. பதிவு: சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை

சென்னை: சென்னையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 15-ம் தேதி கனமழை பெய்தது. அன்றைய தினமே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன் பிறகு, வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவான நிலையில், தமிழகம் நோக்கி வீசவேண்டிய ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று, புயலின் … Read more

டெல்லி தொழிலதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டல்: 3 நாட்களுக்கு பிறகு 2 பேர் கைது

புதுடெல்லி: டெல்லியில் தொழிலதிபரிடம் ரூ.15 கோடி கேட்டு மிரட்டிய 2 பேர் 3 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து உத்தரவு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வடமேற்கு டெல்லியின் ராணி பாக் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டின் மீது கடந்த 26-ம் தேதி காலை 8 மணிக்கு 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அப்போது ரூ.15 கோடி தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து விட்டு இருசக்கர … Read more