லண்டன் : நூற்றாண்டுகளாக இயங்கி வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் மூடப்பட்டது

லண்டன் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் ஆகியவை மூடப்படுவதாக லண்டன் மாநகராட்சி அறிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்கும் மேலாக பாரிங்டோன் பகுதியில் இயங்கி வரும் ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தையை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்நகர மக்கள் குரல் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அந்த இறைச்சி சந்தையில் வியாபாரம் செய்து வருபவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்போதுள்ள இடத்தில் இருந்து … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் அம்பாறை மாவட்டத்திற்கு வெள்ள நிலைமைகள் தொடர்பாகக் கண்காணிப்பு விஜயம்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் மற்றும் தற்போதைய அவசர நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்கான கள விஜயம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க இன்று (30) மேற்கொண்டார். இதன் போது ஆளுநர், கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு விநியோகிக்குமாறு, அம்பாறை மாவட்ட செயலாளரிடம் வழங்கி வைத்தார். … Read more

பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா… பொள்ளாச்சி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் செய்த அசிங்கம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஹோட்டல் அறையில் `ரகசிய’ கேமரா; ஷூட்டிங்குக்குச் சென்ற இடத்தில் நடிகைக்குக் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்துவதற்காக தனி கழிப்பறை உள்ளது. பெண் செலிவியர் ஒருவர் நேற்று அந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பேனா வடிவிலான கேமரா ஒன்று … Read more

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை 500 மருத்துவ முகாம்கள் | ஃபெஞ்சல் புயல் தாக்கம்

சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (டிச.1) 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் … Read more

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் உறுதி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் எதிரெதிர் அணியில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் கூறும்போது, “டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலின்போது … Read more

இந்துமத தலைவர் கைது செய்த வங்கதேசம் : ஷேக் ஹசீனா. கண்டனம்

டாக்கா இந்து மதத்தலைவரை கைது செய்த வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார், வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி  ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். … Read more

சையத் முஷ்டாக் அலி கோப்பை: குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி

இந்தூர், 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழக அணி குஜராத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 133 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஹெமங் படேல் அரைசதம் அடித்தார். தமிழகம் தரப்பில் சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 … Read more

டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தல்

வாஷிங்டன், அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி 20-ந்தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து டிரம்ப் அறிவித்து வருகிறார். இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களில், தற்போது … Read more

ஃபெஞ்சல் புயல் அப்டேட்: இரு தினங்களுக்கு எங்கெல்லாம் ரெட் அலர்ட்?

சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் எதிரொலியாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவ்விரு நாட்களிலுமே புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 … Read more