பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம்: மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம்
பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மகாராஷ்டிர கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவின் அகில்யாநகர் மாவட்டத்தில் சவுண்டாலா கிராமம் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அந்த கிராமத்தில் 1,800 பேர் வசிக்கின்றனர். மகாராஷ்டிராவின் முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக சவுண்டாலா போற்றப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டில் எவ்வித மோதலும் இல்லாத கிராமம் என்ற விருதை சவுண்டாலா பெற்றது. கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள … Read more