சிஎஸ்கே, மும்பை இல்லை! பலமான பேட்டிங் ஆர்டர் வைத்திருப்பது இந்த 3 அணிகள் தான்!

ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் தங்களது பழைய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் பேட்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல்லில் 250 … Read more

சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு உதவிய அரசு பேருந்து ஓட்டுநரின் மனித நேயம் – வீடியோ

சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவுக்கு அரசு பேருந்து ஓட்டுநரின் உதவிய மனித நேயம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஃபெங்கல் புயல் காரணமாக வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சென்னையில், மழைதண்ணீரில் சிக்கி பழுந்தடைந்து, இயக்க முடியாமல்  சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை கரைசேர்க்கும் விதமாக அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்து மூலம் ஆட்டோவை தள்ளியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பேருந்து டிரைவரின் மனிதநேயம் சமூக வலைதளங்களில் போற்றப்பட்டு வருகிறது. இது … Read more

'தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதா?' – மத்திய மந்திரி கண்டனம்

போபால், மராட்டிய மாநில தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர் வெளியான தகவல்களின்படி, வாக்குப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 7.83 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடிதம் எழுதினார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பாய் ஜக்தாப் உள்ளிட்ட பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை … Read more

இந்தியா – ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி பயிற்சி ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

கான்பெர்ரா, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி … Read more

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

பெய்ரூட், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப்போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கி வரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானில் 3,800-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்தனர். … Read more

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்த கொற்றாண்டார் குளம் வீதி புணரமைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்த கொற்றாண்டார் குளம் வீதி(மருதங்கேணி பளை சுனாமி அபாய வெளியேற்றபாதை) புணரமைக்கப்பட்டது. இதன் மூலம் பெரும் சேதத்துக்கு உள்ளாகவிருந்த நிலையில் குறித்த பாதையின் இரு பக்கமும் மண் மூடைகள் அடுக்கப்பட்டு குறித்த வீதி சீரமைக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களம், பளை பிரதேச சபை மற்றும் பலாலி பாதுகாப்பு படை தரப்பினர் அடங்கிய குழுவினரின் ஒத்துழைப்புடன் குறித்த வீதி இவ்வாறு சீரமைக்கப்பட்டது. அனர்த்த காலத்தில் இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த … Read more

`ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத் தூண் அமைக்க தடையில்லை' – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் மறைந்த மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத்தூண் அமைப்பதற்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தனியார் நிலத்தில் ஒருவரின் சிலை வைப்பது அவரவர் விருப்பம் என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், நெக்குண்டி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி படம் பொறித்த நினைவுத்தூண் ஒன்றை நிறுவ திட்டமிட்டார் 2021ல் தர்மபுரி மாவட்டத்துக்குட்பட்ட … Read more

அம்மா உணவகங்களில் இலவச உணவு: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும். அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழகம் மற்றும் … Read more

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு; 30 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவிலிருந்து கோண்டியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பிந்த்ரவன தோலா கிராமத்துக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்து கோண்டியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை … Read more

ரேஷன் கார்டு தொடர்பான முக்கிய அப்டேட்! உடனே இதை செய்ய வேண்டும்!

Ration Card Update: இந்தியாவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் உங்கள் KYCஐ உடனே முடிக்க வேண்டும். இல்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.