Amazon Black Friday Sale: 32-55 இஞ்சி ஸ்மார்ட் டிவிகளில் 55% வரை தாள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்க

Amazon Black Friday Sale: ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கு ஏற்ற நேரமாக இருக்கும். ஸ்மார்ட் டிவி -களில் அமேசான் மிகப்பெரிய தள்ளுபடியை அளித்துள்ளது. அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.  இந்த பதிவில் அமேசான் பிளாக் ஃப்ரைடே சேலில் ஸ்மார்ட் டிவி -களில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றி காணலாம். 32 இன்ச், … Read more

புயல் – கனமழை எதிரொலி: அரசு மருத்துவமனை, அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஆய்வு – இன்று உணவு இலவசம்

சென்னை; புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பாதிக்கப்டும் மக்கள் உணவருந்தும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவெடுத்து இருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு வருகிறது. மேலும், இது 12கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று  மாலை பொழுதில்  அல்லது இரவு கரையைக் கடக்கும் என … Read more

அசாமில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம்

திஸ்பூர், அசாம் மாநிலம் கர்பி ஆங்க்லாங் பகுதியில் இன்று அதிகாலை 2.40 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.9 அளவாக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Assam  earthquake  அசாம்  நிலநடுக்கம் 

முதல் போட்டியில் அஸ்வின், ஜடேஜா இடம்பெறாததற்கு காரணம் அவர்தான் – துணை பயிற்சியாளர்

பெர்த், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது. முன்னதாக முதல் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் – … Read more

விண்வெளி நிலையத்தில் தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்- வீடியோ

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று நன்றி செலுத்துதல் நாள் (தேங்க்ஸ் கிவ்விங் டே) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று (28.11.2024) தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடப்பட்டது. நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடி உள்ளார். அவர், வீடியோ வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தேங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து தெரிவித்தார். பூமியில் உள்ள நாசா விஞ்ஞானிகளும் அவர்களுக்கு … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு அரசாங்க அதிபரினால் உதவி!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் குறித்த உலருணவுப் பொதிகள் சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாதுகாப்பாக மக்களை தங்கவைத்துள்ள இடைத்தங்கல் முகாமில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது மேலதிக அரசாங்க அதிபார் (காணி) நவரூபரஞ்ஜினி முகுந்தன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் … Read more

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: இன்றிரவு 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை: கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று (நவ.30) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 7 மணி வரை மூடல்: புயல் காரணமாக சென்னை, புறநகர்ப் … Read more

உ.பி சம்பல் மசூதி கள ஆய்வை நிறுத்த வேண்டும்: அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் நகரில் ஜாமா மசூதியில் களஆய்வின் போது கலவரம் நடைபெற்று 4 பேர் பலியாகினர். இதனால், களஆய்வு நடவடிக்கையை நிறுத்த வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் கீழே இந்துக் கோயில் இருந்ததா? என்பதை … Read more

தனுஷை மறைமுகமாக தாக்கிய நயன்தாரா?! இன்ஸ்டாவில் போட்ட பதிவு..

Nayanthara Instagram Story About Karma : நடிகை நயன்தாராவிற்கும் தனுஷிற்கும் நடந்த தகராறு, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து, நயன் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.