RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' – ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் RJ பாலாஜி நடிப்பில் உருவாகி , நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் `சொர்க்க வாசல்’ இதற்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . ட்ரைலரில் வந்த காட்சிகள் மற்றும் RJ பாலாஜியின் நடிப்பு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் நேற்று மாலை கோவை ப்ருக்ஃபீல்ட்ஸ் மாலிலுள்ள திரையரங்கில் சொர்க்கவாசல் திரைப்படத்தைக் கண்டார் RJ பாலாஜி . ரசிகர்களுடன் திரைப்படம் கண்ட அவர் படம் … Read more

புயல் நடவடிக்கை குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு – மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரிப்பு…

சென்னை:   புயல் நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு  மேற்கொண்டதுடன், சில  மாவட்ட ஆட்சியர் களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால், சென்னை உள்பட அண்டைய மாவட்டகளில் நேற்று முதல் கனத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்தும், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் … Read more

கர்நாடகா: ஓட்டல் அறையில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு – காதலன் கைது

பெங்களூரு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாயா கோகாய் என்ற 19 வயது இளம்பெண், கடந்த 23-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலன் ஆரவ் ஹனாய்(21) என்பவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து 2 நாட்களாக அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வராத நிலையில், 26-ந்தேதி ஆரவ் மட்டும் அறையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். அவர் சென்ற பிறகு அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கிருந்த ஊழியர்கள் சந்தேகமடைந்து … Read more

சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி

லக்னோ, சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் 21-8, 21-19 என்ற நேர்செட்டில் சக நாட்டை சேர்ந்த மிராபா லுவாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதே போல் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் நுயென் ஹாய் டாங்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். பெண்கள் … Read more

மலேசியாவில் மோசமான வெள்ளம்; 3 பேர் பலி

கோலாலம்பூர், மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 7 மாநிலங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 84,547 பேர் 488 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் எல்லையை ஒட்டிய வடகிழக்கு மாநிலமான கெலந்தனில் 56,029 பேர் … Read more

தமிழ்நாட்டில் ஹோண்டா ஆக்டிவா இ மற்றும் QC1 எலெக்ட்ரிக் விற்பனைக்கு எப்பொழுது வரும்..!

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் மற்றும் க்யூசி1 என இரண்டு ஸ்கூட்டர் விலை அறிமுகம் செய்துள்ள நிலையில் இரண்டு மாடல்களும் வெவ்வேறு விதமான நுட்ப விபரங்களை பெற்று வித்தியாசப்படுகின்றது. இவற்றை தமிழ்நாட்டில் எப்பொழுது எதிர்பார்க்கலாம் மற்றும் எங்கே வாங்கலாம் போன்ற முக்கிய விபரங்கள் தற்பொழுது அறிந்து கொள்ளலாம். ஜனவரி 1, 2025 முதல் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஹோண்டா 2 வீலர் துவங்க உள்ளது. ஆக்டிவா இ மாடல் ஆனது … Read more

பந்தலூர்: காயங்களுடன் தனியார் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை; தொடரும் துயரம்!

நீலகிரியில் காடுகளை இழந்து தவிக்கும் காட்டுயிர்கள் தனியார் பெருந்தோட்டங்களில் தஞ்சமடைந்து வரும் நிலையில், தோட்டங்களில் மர்மமான முறையில் இறக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பந்தலூர் அருகில் சுருக்கு வலை கம்பியில் சிக்கி கடந்த வாரம் புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்து. இதேபோல் பந்தலூர் அருகில் உள்ள பிதர்காடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்த சிறுத்தை இந்நிலையில், … Read more

மாறும் நகரும் வேகம்: ஃபெஞ்​சல் புயல் இன்று கரையை எப்போது கடக்கும்?

சென்னை: வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்கிறது. ‘ஃபெஞ்​சல்’ புய இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண்ணுக்கு 6 மாதம் ஜாமீன்: மும்பை உயர்நீதிமன்ற கிளை வழங்கியது

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்துக்காக 6 மாதம் ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸா் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் நடத்திய சோதனையில் ஒரு கும்பல் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் ஒரு பெண் சுர்பி சோனி. அவரது பைகளில் 7 கிலோ கஞ்சா இருந்தது. கைது செய்யப்பட்டபோது அவர் 2 மாத கர்ப்பிணியாக … Read more

நைஜீரியாவில் படகு விபத்து: 27 பேர் பலி; 100-க்கும் அதிகமானோர் மாயம்

லாகோஸ்: நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் நேற்று இந்தப் படகு விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்தபோது படகில் 200-க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் கோகி பகுதியில் இருந்து நைகர் நகரில் உள்ள உணவுச் சந்தைக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து … Read more