கூகுள் உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமாகும். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்கள் அதன் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு மும்பை நீதிமன்றம் ஒரு சர்ச்சை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தியானா அறக்கட்டளை மற்றும் அதன் நிறுவனர் யோகி அஸ்வினியை தரக்குறைவாக விமர்சித்து வெளிட்ட வீடியோயை யூட்யூபில் இருந்து நீக்காததற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2022 அக்டோபரில் விலங்கு நல அமைப்பான தியான் அறக்கட்டளை அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தது, யூடியூப் வீடியோ அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், அதன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது என்றும் வாதிட்டது.
“பகண்டி பாபா கி கர்துட்” (‘Pakhandi Baba ki Kartut’) என்ற வீடியோவை அகற்றுவதற்கான மார்ச் 2022 நீதிமன்ற உத்தரவுக்கு யூடியூப் இணங்காததால், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் தியான் அறக்கட்டளை மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதை ஏற்று தற்போது மும்பை கூடுதல் நீதிமன்றம் கூகுளுக்கு அவமதிப்பு நோட்டீஸை வழங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையையும் சாரும்.
நீதிமன்ற உத்தரவு தொடர்பாக கூகுள் கூறியது என்ன?
யூடியூப் ஐடி சட்டத்தின் கீழ் நடுவர் விலக்கு உரிமை கோரியது, சட்டத்தின் பிரிவு 69-A பிரிவில், அவதூறு வீடியோக்களை பிளாக் செய்ய வேண்டும் என்பதில்லை என்று கூகுள் நிறுவனம் (Google) வாதிட்டது. மேலும், இது போன்ற புகார்களை கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது, சிவில் நீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும் என்று யூட்யூப் நிறுவனம் கூறியது.
அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனு
கடந்த ஆண்டு அக்டோபரில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நோட்டீஸ் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தவறான குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோவை கூகுள் வேண்டுமென்றே நீக்கவில்லை என்று NCO கூறியது. “தயான் அறக்கட்டளை மற்றும் யோகி அஷ்வினி ஜியின் நற்செயல்களுக்கும் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் அதே வேளையில், கூகுள் சாதாரண காரணங்களுக்காக தாமதப்படுத்துகிறது மற்றும் ஒத்திவைக்க முயற்சிக்கிறது” என்று NGO கூறியது.
நீதிமன்றம் கூறியது என்ன
இருப்பினும், யூடியூப்பின் ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்தது. இது போன்ற வழக்குகளில் குற்றவியல் நீதிமன்றங்கள் தலையிட ஐடி சட்டம் தடை செய்கிறது என்று கூறியது. குற்றவியல் நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் எதுவும் எழுதப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. அவமதிப்பு வழக்கின் அடுத்த விசாரணை 2025 ஜனவரி 3ம் தேதி அன்று நடைபெறும்.