சராசரி திருமண செலவு ரூ.36.5 லட்சமாக உயர்வு: ‘வெட்மிகுட்’ நிறுவனம் ஆய்வு அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டில் திருமண செலவு சராசரியாக 7% அதிகரித்து ரூ.36.5 லட்ச​மாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

திருமண வைபவம் ஆண்டு​தோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. இதனால் இதற்கான செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ‘வெட்​மிகுட்’ நிறு​வனம் 3,500 தம்ப​தி​களிடம் கருத்துகளை கேட்டு ஒரு ஆய்வு நடத்​தி​யது. இதில் 9% பேர் தங்கள் திரு​மணத்​துக்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவிட்​டதாக தெரி​வித்​தனர். மேலும் 9% பேர் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவிட்​டதாக தெரி​வித்​தனர்.

தங்கள் திரு​மணத்​துக்கு ரூ.15 லட்சத்​துக்​கும் கீழ் செலவிட்​டதாக ஆய்வில் பங்கேற்​றவர்​களில் 40% பேர் தெரி​வித்​தனர். இதுபோல ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவிட்​டதாக 23% போரும் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவிட்​டதாக 19% பேரும் தெரி​வித்​தனர். இதன்​படி, இந்த ஆண்டில் சராசரியாக ஒரு திரு​மணத்​துக்கு ரூ.36.5 லட்சம் செலவிடப்​பட்​டுள்​ளது. இது கடந்த ஆண்டின் சராசரி செலவை விட 7% அதிகம். அதேநேரம், தம்ப​தி​களின் சொந்த ஊரில் அல்லாமல் வெளியூரில் திரு​மணம் செய்​தவர்​களின் சராசரி செலவு ரூ.51 லட்சமாக உயர்ந்​துள்ளது.

சொந்த சேமிப்பு மற்றும் குடும் பத்​தினரின் சேமிப்​பிலிருந்து திருமண செலவை எதிர்​கொண்​டதாக 82% தம்ப​திகள் தெரி​வித்​தனர். திரு​மணத்​துக்காக கடன் பெற்​றதாக 12% பேரும் தங்கள் சொத்தை பணமாக்​கியதாக 6% பேரும் தெரி​வித்​தனர். இதுகுறித்து டெல்​லியைச் சேர்ந்த திருமண ஏற்பாட்​டாளர் ஷஷாங்க் குப்தா கூறும்​போது, “ஒவ்​வொரு​வரும் தங்கள் திரு​மணத்தை சிறந்த முறை​யில் வித்​தி​யாசமாக நடத்த விரும்​பு​கின்​றனர். திருமண செலவில் அதிகபட்​சமாக திருமண இடத்​துக்கு செலவிடு​கின்​றனர். அடுத்​த​படியாக உணவு மற்றும் நல்ல திருமண ஏற்பாட்​டாளர் நிறு​வனத்​துக்கு அதிகம் செலவிடு​கின்​றனர். இந்தியா​வில் பெரும்​பாலானவர்கள் சொந்த வீடு வாங்​க​வும், திரு​மணத்​துக்​கும் குழந்தை​களின் கல்விக்​கும் அதிகம் செலவிடு​கின்​றனர்” என்றார்.

இந்தியா​வில் இந்த ஆண்டில் நவம்​பர், டிசம்பர் மாதங்​களில் மட்டும் 48 லட்​சம் ​திரு​மணம் நடை​பெறும் என்​றும் இதன் மூலம் ரூ.6 லட்​சம் கோடி வர்த்​தகம் நடை​பெறும் என்​றும் அனைத்து இந்​திய வர்த்தக கூட்​டமைப்பு கணித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.