கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன ஜோ ரூட் 2-வது இன்னிங்சில் 23 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனை ஒன்றை தகர்த்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (1625 ரன்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள ஜோ ரூட் 1630 ரன்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. ஜோ ரூட் – 1630 ரன்கள்
2. சச்சின் – 1625 ரன்கள்
3. அலஸ்டயர் குக்/கிரேம் ஸ்மித் – 1611 ரன்கள்