பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர்

கடலூர் / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்​டத்​தில் வெள்ளம் சூழ்ந்த குடி​யிருப்பு​களில் இருந்த பொது​மக்கள் மீட்​கப்​பட்டு, பாது​காப்பு மையங்​களில் தங்கவைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று நிவாரணப் பொருட்களை வழங்​கினார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்​களாக பெய்த கனமழை​யால் தாழ்வான பகுதி​களில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்​டுள்​ளது. வெள்ளம் சூழ்ந்த குடி​யிருப்பு​களில் வசிக்​கும் பொது​மக்கள் மீட்​கப்​பட்டு, நிவாரண முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இதன்​படி, கடலூர் மாவட்​டத்​தில் 17 நிவாரண முகாம்​களில், 703 பேர் பாது​காப்பாக தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு உணவு மற்றும் அத்தி​யா​வசியப் பொருட்கள் வழங்​கப்​பட்​டுள்ளன.

இந்நிலை​யில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், கடலூர் புருஷோத்​தம்மன் நகர் பகுதி​யில் தேங்​கி​யுள்ள மழைநீர் அகற்றும் பணியை நேற்று பார்​வை​யிட்டு, அந்தப் பணியை விரைந்து முடிக்​கு​மாறு அதிகாரி​களுக்கு அறிவுறுத்​தினார்.

தொடர்ந்து, கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கலைக் கல்லூரி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள பாது​காப்பு மையத்​தில் தங்க வைக்​கப்​பட்​டுள்ள 256 பேருக்கு பிஸ்​கெட், பால், அரிசி, பிரட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்​கினார். மேலும், பல்வேறு பகுதி​களில் தேங்​கி​யுள்ள மழைநீரை அகற்றி, போக்கு​வரத்தை சீரமைக்​கு​மாறு துறை அலுவலர்​களுக்கு உத்தர​விட்​டார்.

அமைச்​சர்கள் எம்ஆர்​கே.பன்னீர்​செல்​வம், சி.வெ.கணேசன், பொன்​முடி, எஸ்.எஸ்​.சிவசங்​கர், செந்​தில் பாலாஜி, எம்எல்​ஏக்கள் கோ.ஐயப்​பன், சபா.ராஜேந்​திரன், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, ஊரக வளர்ச்​சித் துறைச் செயலர் ககன்​தீப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலு​வலர் ராமன், ஆட்சி​யர் ஆ​தித்யா செந்​தில்​கு​மார், துணை மேயர் ​தாமரைச்​செல்​வன் உடனிருந்​தனர்​.

நரிக்குறவர்கள் கோரிக்கை: முன்ன​தாக, விழுப்புரம் மாவட்டம் மரக்​காணம் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், அங்குள்ள அரசுப் பள்ளி​யில் தங்கி​யிருந்த நரிக்​குறவர்​களுக்கு வேட்டி, சேலை மற்றும் உணவு உள்ளிட்​ட​வற்றை வழங்​கினார். அப்போது நரிக்​குறவர்​கள், தங்களுக்கு நிலப்​பட்டா வழங்கி, கான்​கிரீட் வீடு கட்டிக் கொடுக்​கு​மாறு வலியுறுத்​தினர். உரிய நடவடிக்கை எடுப்​பதாக துணை முதல்வர் உறுதி​யளித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.