டாக்கா: வங்கதேசத்தில் மூத்த பெண் பத்திரிகையாளர் முன்னி சாஹாவை இந்தியாவின் உளவாளி எனக் கூறி கும்பல் ஒன்று நேற்று (சனிக்கிழமை) முற்றுகையிட்டது. பின்பு அவர் போலீஸாரால் மீட்கப்பட்டார்.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் கர்வான் பஜார் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தான் வேலைபார்க்கும் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து முன்னி சாஹா வெளியேறிய போது கும்பல் ஒன்று அவரைச் சூழ்ந்து முற்றுகையிட்டது. சாஹா ஒரு இந்திய முகவர் என்றும் ஆகஸ்ட் மாதம் நடந்த மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதாரவாளர் என்றும் குற்றம்சாட்டியது.
உள்ளூர் ஊடகங்களின் அறிக்கையின் படி, “சாஹாவின் காரினை வழிமறித்த கும்பல் ஒன்று அவருக்கு எதிராக கோஷம், அவதூறு வார்த்தகைளை முழங்கினர். இதனைத் தொடர்ந்து டாக்கா நகர போலீஸார் அவரை மீட்டுச் சென்றனர். டாக்கா நகர புலனாய்வு கிளைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, தேஜ்கான் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு என்ற ஊகத்தை கிளப்பியது.
என்றாலும் மூத்த பத்திரிகையாளர் காவலில் வைக்கப்படவில்லை என்றும் ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “முன்னி சாஹா போலீஸாரால் கைது செய்யப்படவில்லை. தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறும் போது கும்பல் ஒன்றால் சூழப்பட்ட அவரை மீட்ட போலீஸார் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை புலனாய்வு கிளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சாஹா நான்கு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர் அவைகளுக்கு ஜாமீன் பெறுவதற்கும் எதிர்கால சம்மன்களுக்கு பதில் அளிக்கவும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.” என்று தெரிவித்தார். என்றாலும் அவரை முற்றுகையிட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டத்தைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் பரந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை பார்க்க்கப்படுகிறது. பல பத்திரிகையாளர்கள், ஒரு சார்பு குற்றச்சாட்டு, சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
வங்கதேசத்தில் அதிகாரத்தில் உள்ள முகம்மது யூனுஸ் தலைமையிலான தற்கால அரசு பல பத்திரிக்கையாளர்களின் அனுமதியினை ரத்து செய்துள்ளது. பலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
কারওয়ানবাজার থেকে সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার |
Munni Saha Arrest | Channel 24 pic.twitter.com/xq7x0HHkzd— Md. Sohel Rana (@mdsohelrana7707) December 1, 2024