சென்னை புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி 12000 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]