6 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த ஹர்ஷித் ராணா! இனி இந்த வீரருக்கு வாய்ப்பு கம்மிதான்!

கான்பெராவில் நடைபெற்று வரும் Prime Ministers XI அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். 131 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது Prime Ministers XI அணி. இந்த சமயத்தில் ஹர்ஷித் ராணா 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 40 ரன்களுடன் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜாக் கிளேட்டன், ஹர்ஷித்தின் 23வது ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் 23வது ஓவரின் கடைசி பந்தில் 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆலிவர் டேவிஸை இரண்டு பந்துகளில் டக் ஆக்கினார் ஹர்ஷித்.

Double blow by #HarshitRana, dismisses a settled Clayton and follows up with Davies, rattling Australia’s batting order in the #PinkBallTest AUSvINDonStar Warm-up match LIVE NOW on Star Sports! #ToughestRivalry pic.twitter.com/t7DkGfLPja

— Star Sports (@StarSportsIndia) December 1, 2024

பிறகு 25வது ஓவரின் முதல் பந்தில் ஜாக் எட்வர்ட்ஸை வெளியேற்றினார். அதே ஓவரில் 3வது பந்தில் ஹார்பரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதானால் Prime Ministers XI 133 ரன்களில் 6 விக்கெட்களை இழந்தது. இறுதியில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். சாம் கான்ஸ்டாஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார், ஹன்னோ ஜேக்கப்ஸ் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் மனுகா ஓவலில் இரண்டு நாள் பயிற்சி ஆட்டமாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக சனிக்கிழமை முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை போட்டி தொடங்கியது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா டாஸ் வென்று ஜாக் எட்வர்ட்ஸின் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிராக பந்துவீச முடிவு செய்தது. இரண்டாவது நாளிலும் மழை பெய்ததால் 50 ஓவர்கள் ஆட்டம் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் முதல் டெஸ்ட் போலவே ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஓப்பனிங் இறங்கினர். ரோஹித் சர்மாவின் பெயர் 4வது இடத்தில் இருந்தது. இதன் மூலம் 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க மாட்டார் என்று தெளிவாக தெரிகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6 முதல் தொடங்க உள்ளது. பகல் இரவு ஆட்டமாக பிங்க்-பால் டெஸ்ட் போட்டிக்கு இந்தியா தயாராகி வருகிறது.

இந்திய அணி: ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (WK), கே.எல். ராகுல், துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் சிராஜ் கிருஷ்ணா, முகமது சிராஜ் கிருஷ்ணா, முகமது சிராஜ் கிருஷ்ணா தீப், ஹர்ஷித் ராணா, சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.