ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் (டிச.1) நடைபெற்றது.
ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கலை, இலக்கியம், விளையாட்டு உட்படப் பல துறைகளைச் சார்ந்தவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு திரைத்துறை சார்பில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவிற்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசியிருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ், திரைப்படங்கள் தயாரிப்பது பற்றி பேசுகையில், “இப்போது ‘சுமோ’, ‘அகத்தியா’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘ஜீனி’ என வரிசையாகத் திரைப்படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. 2025 ஜனவரியிலிருந்து அடுத்தடுத்து வரிசையாகத் திரைப்படங்கள் வெளியாகும்.
தனுஷ் சார் வச்சு 2 படங்கள் பண்ணிட்டு இருக்கோம். ஜெயம் ரவி வைத்து 2 படங்கள் பண்ணிட்டு இருக்கோம். ‘மூக்குத்தி அம்மன் -2 பண்ணிட்டு இருக்கோம். இன்னும் இரண்டு பெரிய ஸ்டார்களுடன் படம் பண்ணவிருக்கிறோம். 2026-ல் அடுத்தடுத்து இதுகுறித்த அப்டேட்கள் வெளியாகும்” என்றார்.
‘போர்த் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் தனுஷ் ஒரு திரைப்படம் நடிப்பதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…