FBI இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் பட்டேலை நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இதுகுறித்து தனது சமூகவலை தளத்தில் கூறியிருப்பதாவது, “எஃப்பிஐ-ன் அடுத்த இயக்குநராக காஷ்யப் ‘காஷ்’ பட்டேல் பணியாற்றுவார் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். காஷ் ஒரு சிறந்த வழக்கறிஞர், துப்பறிவாளர் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், நீதியை பாதுகாப்பதற்கும், அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும் தனது வாழ்நாளை செலவிட்ட அமெரிக்கா ஃபர்ட்ஸ் போராளி.

எனது முதல் பதவி காலத்தில் காஷ் மிகப்பெரிய பணியினைச் செய்தார். அப்போது அவர், பாதுகாப்பு துறையின் தலைமை தளபதியாகவும், தேசிய உளவுத்துறையின் துணை இயக்குநராகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக்கான மூத்த இயக்குநராகவும் பணியாற்றினார்.

எஃப்பிஐக்கு நம்பகத்தன்மை, தைரியம் மற்றும் ஒருமைப்பாட்டை மீண்டும் கொண்டுவர எங்களின் சிறந்த அட்டர்னி ஜெனரல் பாம் பாண்ட்டின் கீழ் காஷ் பணியாற்றுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி அமெரிக்கரான காஷ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த குஜராத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்கள் 1970களில் அடிக்கடி லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் நியூயார்க்கின் குயின்ஸ்ஸுக்கு குடிபெயர்ந்தனர்.

நியூயார்க்கில் பள்ளிப்படிப்பையும், ரிச்மண்டில் கல்லூரிப் படிப்படையும் நியூயார்க் சட்டப்பள்ளியில் சட்டப்படிப்பினையும் முடித்துள்ளார் காஷ். பின்பு ஃபிளோரிடா வந்த வந்த அவர், மாநில வழக்கறிஞராக நான்கு ஆண்டுகளும், அதன் பின்பு அடுத்த நான்கு ஆண்டுகள் மத்திய பொது வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

ஃபிளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்குச் சென்ற காஷ் நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றினார். மூன்றரை ஆண்டுகள் அவர் இந்தப் பணியில் இருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.