இன்று ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமாக ஜொலிப்பதற்கு அடித்தளம் போட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது எல்லோரும் அறிந்ததே.
புதுமையான கண்டுபிடிப்புகள், புதுப்புது தொழில்நுட்பங்கள், டிசைனில் புதுமைகள், மார்க்கெட்டிங் யுக்திகளால் ஆப்பிள் நிறுவனத்தை டெக் உலகின் உச்சத்திற்குக் கொண்டு சென்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு நாடுகளின் புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் வாசித்த புத்தகங்கள் நன்றாக இருந்தால், அதை நண்பர்களுக்கும் பரிசாக அனுப்பிவிடும் பழக்கம் கொண்டவர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/12/ட்க்ச்ட்ஃப்ச்ட்jpg.jpeg)
கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், அக்டோபர் 5, 2011 காலமானார். ஆப்பிள் நிறுவனத்திற்கு அவர் கொடுத்த பெரும் உழைப்புதான் இன்று அந்நிறுவனம் உச்சத்தில் இருப்பதற்குக் காரணமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஸ்டீவ் ஜாப்ஸின் நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டிருந்தார் அவரது நெருங்கி நண்பர் ‘சேல்ஸ் ஃபோர்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆஃப். அதில் ஸ்டீவ் ஜாப்ஸி கடைசியாகத் தனக்கு அனுப்பிய புத்தகம் பற்றிப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் மார்க் பெனிஆஃப், “ஸ்டீவ் ஜாப்ஸ் நண்பர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை அனுப்புவார். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கும், இன்னும் சில நண்பர்களுக்கும் அவர் புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பியிருந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘Autobiography of a Yogi (ஒரு யோகியின் சுயசரிதை)’. அதை எழுதியவர் பரமஹம்ச யோகானந்தா. இப்புத்தகம் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மிகவும் பிடித்த புத்தகங்களுள் ஒன்று. அதை இன்னும் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவாக வைத்திருக்கிறேன்” என்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/12/steve-jobs-ay-feature-ysite-cropped-1.jpg)
பரமஹம்ச யோகானந்தா என்ற யோகியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இப்புத்தகம் ஆன்மீகம் குறித்தும் தன்னை அறிதல் குறித்தும் ஆழமாகப் பேசுகிறது. இப்புத்தகம் சிறந்த ஆன்மீக நூல் என்ற பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறது. ரஜினிகாந்த், விராட் கோலி, சச்சின் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்புத்தகத்தைப் பற்றி நேர்காணலில் பேசியிருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-18-at-16.55.14-2.jpeg)