பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, அண்மையில் பல பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவுடன் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோரின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளும்போது போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலம் உள்வாங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான வயதில்லை 45 வரை கருத்தில் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், உரிய தீர்வுகள் அமுல்படுத்தப்படும் வரை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏனைய அரச அலுவலகங்களுக்கு இடமாற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக செயலாளர் உறுதியளித்தார்.
அத்துடன், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் இதன் போது தெரிவித்தார்.