பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு இங்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் வலுவிழந்த நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழையை கொட்டித் தீர்த்தது. தற்போது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்ததாக பெங்களூரில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. […]