சென்னை எக்ஸ் தளத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகி உள்ளார். ‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சில திரைப்படங்களில் இருந்துள்ளார். சில படங்களில் சிறப்பு கதாபாத்திரத்திலும் தோன்றியுள்ளார். தப்போது எல்.ஐ.கே.(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் மூலம் […]