H.Raja: "Dravidian Stock-களுக்கு எதிரான Fight எப்பவுமே தொடரும்" – ஹெச்.ராஜா

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா, மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளின் விசாரணையில் ஒவ்வொரு வழக்குக்கும் தலா ஆறு மாதங்கள் (ஓராண்டு) சிறைத் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஹெச். ராஜா, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘பெரியார் சிலையை உடைப்பேன்’ என தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதே ஆண்டு தி.மு.க எம்.பி கனிமொழிக்கு எதிராக அவதூறாக கருத்து கூறியதாக ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சர்ச்சைக்குள்ளான எச்.ராஜாவின் எக்ஸ் பதிவு

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வு, “இந்த இரண்டு வழக்குகளிலும், ஹெச்.ராஜா குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வழக்குக்கும் தலா ஆறு மாதங்கள் (ஓராண்டு) சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பு வழங்கியது.

இன்று (நவ.2) காலை முதலே இச்செய்தி பா.ஜ.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் ஹெச்.ராஜா, “இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை. சித்தாந்த எதிரிகளுக்கு எதிராக இப்படி வழக்குகள் போடப்படுவது வழக்கமான விஷயம்தான். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்த மாதம் டிசம்பர் 31ம் தேதி வரை மேல்முறையீட்டுக்குக் காலக்கெடு கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய வழக்கறிஞர்கள் சட்டப்போராட்டத்தை நடத்துவார்கள்.

ஆறுபது ஆண்டுகாலமாக நான் நம்பியிருக்கும் சித்தாந்தத்தின் பக்கம் நின்று போராடி, பல வழக்குகளை சந்தித்திருக்கிறேன். எனவே, இந்த வழக்கினால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. “Dravidian Stock-களுக்கு எதிரான Fight எப்பவுமே தொடரும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.