கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் ஈடுபடுத்தப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (03) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். முழு அரச சேவையிலும் எந்த திட்டமும் இன்றி அவ்வப்போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து குழுக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் தலையிடும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
கடந்த அரசாங்கங்களினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு போதும் அவர்களது போராட்டத்திற்கு பொலிஸாரை ஈடுபடுத்தவில்லை. அப்போது அங்குள்ள நிலவரத்தை வைத்து பொலிசார் எடுத்த நடவடிக்கை ஒன்றும் போராட்டத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.