அஸ்வெவும நலன்புரி உதவிகளைப் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை எழுதுகருவிகளை பெற்றுக் கொள்வதற்காக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக ஒரு குழந்தைக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அஸ்வெசும நலன்பரி கொடுப்பனவுகளுக்கு உட்படாத பெற்றோரை இழந்த குழந்தைகள், ஊனமுற்ற தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகள், அனாதை இல்லங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகள், மற்றும் விசேட காரணங்களினால் ஆதரவற்றிருக்கும் குழந்தைகள் ஆகியோருக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்