சிலாபம் புகையிரதப் பாதையினூடாக பயணிக்கும் புகையிரத சேவை சீரமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே துணைப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) ஜே.என். இந்திபொலகே தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளம் இன்று (03) அது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் புகையிரதப் பாதையில் இன்று காலை புகையிரதப் போக்குவரத்து தடைபட்டடிருந்ததைத் தொடர்ந்தே இந்த ரயில் சேவை சீரமைக்கப்பட்டுள்ளது.