வெள்ள நீர் முழுமையாக வற்றியதும் டெங்குக் கட்டுப்பாட்டிற்கான வேலைத் திட்டமொன்றை சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவும் அபாயம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும், அது குறித்து அமைச்சு நடவடிக்கை எடுக்கதாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிலையான வேலைத் திட்டமொன்றை கியூபா நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்வதற்கு கலந்துரையாடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இது நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் பிரச்சினையாக இருப்பதனால் கியூபா நாட்டு உதவியாக அது தொடர்பான கூட்டுப் புழுவைக் கொண்டு வந்து டெங்கு கட்டுப்பாட்டிற்கு உதவுவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.