பிஎஸ்என்எல் வழங்கும் தடாலடி சேவை… 500+ சேனல்களும் பல ஓடிடிகளும் – இது இருந்தால் மட்டும் போதும்!

BSNL Skypro IFTV Service: பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே தொலைத்தொடர்பு துறையில் அதன் புதுப்புது மைல்கற்களை கடந்து வருகிறது. ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதால் சுமார் 1 கோடி பயனர்களை இழந்த தகவல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்தது. 

இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாளர்கள் படிப்படியாக உயர்ந்து வருகின்றனர். 8.5 லட்சம் பயனர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதற்காக பல்வேறு இடங்களில் நூற்றணக்கணக்கானடவர்கள் அமைக்கும் பணிகளையும் பிஎஸ்என்எல் இந்த காலகட்டத்தில் முடுக்கிவிட்டுள்ளது. 

கைக்கோர்த்த பிஎஸ்என்எல் – Skypro

அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் முதல் இணைய தொலைக்காட்சி சேவையை நாட்டில் தொடங்கி உள்ளது. IFTV என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி நிறுவனம் பைபர் மூலம் இந்த சேவையை வழங்குகிறது. இருப்பினும் இந்த சேவையை தமிழ்நாட்டிலும், மத்திய பிரதேசத்தில் மட்டும் பிஎஸ்என்எல் தற்போது தொடங்கியிருந்தது. இது பஞ்சாப் மாநிலத்திற்கும் தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த சேவை குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சமூக வலைதளப்பக்கங்களில் பல்வேறு அறிவிப்புகளையும் பதிவிட்டுள்ளன. 

இந்த இணைய தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்காக பிஎஸ்என்எல், Skypro என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. இது இணைய தொலைக்காட்சி சேவையை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. பிஎஸ்என்எல் மற்றும் Skypro நிறுவனம் இணைந்து நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் சிறந்த நவீன தொலைக்காட்சி மற்றும் இணைய அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. 

என்னென்ன சேனல்கள் கிடைக்கும்?

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்மார்ட் டிவியில் Skypro TV செயலியின் வாயிலாக IPTV தளத்தின் மூலம் IFTV வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம், 500க்கும் மேற்பட்ட HD, SD சேனல்களை பார்க்கலாம். இதற்கு கூடவே 20க்கும் மேற்பட்ட பிரபல ஓடிடி சேவைகளையும் பெறலாம். இதற்காக தனியே செட்ஆப் பாக்ஸ் வாங்க வேண்டிய தேவையில்லை. இதில் Zee, Star, Colors போன்ற தொலைக்காட்சி நெட்வோர்க்களின் சேனல்களையும் நீங்கள் பிஎஸ்என்எல் பைபர் இணைய சேவையை வைத்திருப்பதன் மூலம் காணலாம். 

தமிழ்நாட்டிலும், மத்திய பிரதேசத்திலும் ஏற்கெனவே செயல்பட்டு வந்தாலும் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது இது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநிலத்தின் பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அஜய் குமார் கராஹா கூறுகையில், “கடந்த நவ. 28ஆம் தேதி அன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராபர்ட் ரவி, Skypro நிறுவனத்தின் அதிநவீன IPTV தளம் மூலம் இயக்கப்படும் IFTV சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். ஃபைபர் இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் Zee, Star, Colors போன்ற தொலைக்காட்சி நெட்வோர்க்களின் சேனல்களையும், Star Sports போன்ற பிரபல விளையாட்டு சேனல்களையும் கூடுதல் செட்ஆப் பாக்ஸ் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.