பொலிஸ் ஊடகப் பேச்சாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டமானி புத்திக மணதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், 2014.01.01ஆம் திகதியன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து, 2020.01.01ஆம் திகதி பொலிஸ் அத்தியட்சகராகவும், 2024.01.01ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார்.
மேலும் அவர், திருக்கோணமலை, வவுனியா ஆகிய பிரிவுகளிலும், பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுப் பிரிவின் பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொது மக்கள் நட்புறவுப் பிரிவின் பதில் பணிப்பாளராகவும், சட்டப் பிரிவின் உதவிப் பணிப்பாளராகவும் மற்றும் கந்தளாய் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்கு பொறுப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர்,பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டமும், விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளதுடன் இவர், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் சட்டாமானிப் பட்டமும் பெற்றுள்ளார்.
இவர், பொலிஸ் சேவைத் தொடர்பாக தேசிய பயிற்சிகள் கல்விக்கு மேலதிகமாக, ரஷ்யா, தாய்லாந்து. பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.