இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை வெள்ளியும், வெண்கலமும் வென்றவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இவருக்கு இந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பி.வி.சிந்துவுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த, போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாயுக்கும், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.
திருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் 20ஆம் தேதி தொடங்குகின்றன. டிசம்பர் 24ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாகப் பேசிய சிந்துவின் தந்தை பி.வி. ரமணா, “அவர்கள் இருவரின் நட்பு குறித்து எங்கள் இரு குடும்பத்துக்கும் தெரியும். ஒரு மாதத்துக்கு முன்புதான் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு, முடிவு செய்யப்பட்டது. சிந்து ஜனவரி முதல் பரபரப்பாக இயங்குவார். அப்போது நேரம் கிடைக்காது என்பதால்தான் இப்போதே முடிவு செய்திருக்கிறோம். லக்னோவில் நடந்த சையத் மோடி பட்டத்தை வென்றிருக்கிறார். அடுத்த சீசன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் விரைவில் பயிற்சியைத் தொடங்குவார்” என்றார்.
வெங்கட தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவரது தந்தை, ஜி.டி. வெங்கடேஷ்வர் ராவ், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்து, இந்திய வருவாய் சேவையில் (ஐஆர்எஸ்) பணிபுரிந்தார். வெங்கட தத்தா சாய் லிபரல் அண்ட் மேனேஜ்மென்ட் கல்வி அறக்கட்டளையில் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் டிப்ளமோ முடித்திருக்கிறார். 2018-ல் ஃபிளேம் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் BBA முடித்து, அதைத் தொடர்ந்து சர்வதேச தகவல் நிறுவனத்தில் டேடா சயின்ஸ் படித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…