கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 வரை மற்றும் இன்று மு.ப. 9.30 முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டு நாள் விவாதமாக இடம்பெற்றது.