மஸ்கட்,
10 அணிகள் இடையிலான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், பாகிஸ்தான் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் இன்று (இரவு 8.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஆண்டு இதன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றிருந்த பாகிஸ்தான் அதற்கு பழிவாங்கும் நோக்குடன் ஆடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோத உள்ளன.